அமெரிக்காவின் சபாநாயகர் நான்சி பெலோசி,சீன எச்சரிக்கையைப் புறம் தள்ளி தைவானுக்கு வெற்றிகரமாக சுற்றுப்பயணம்
அமெரிக்காவின் சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்குச் சுற்றுப்பயணம்
மேற்கொள்வதாகத் தகவல் வந்த நாள் முதல் அமெரிக்காவை, சீனா எச்சரித்து வந்த நிலையில், சீனாவின் எச்சரிக்கைகளைக் கண்டுகொள்ளாமல், நான்சி பெலோசி தைவானுக்கு கம்பீரமாக வந்திறங்கினார்.
தைவான் ஒரு சுதந்திர நாடாகும், சீனா இன்னும் கூட அதைச் சொந்தம் கொண்டாடுகிற நிலையில். நான்சி பெலோசி தைவானிலிருந்து தற்போது அமெரிக்காவுக்குத் திரும்பிவிட்ட நிலையில், தைவானைச் சுற்றியுள்ள முக்கியப்பகுதிகளில், சீன ராணுவம் பயிற்சி மேற்கொண்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியதையடுத்து, ரஷ்யா-உக்ரைன் போல் சீனா-தைவானிடையே போர் மூளுமென்று பல தரப்பிலும் பேசப்படுகிறது.
இந்த நிலையில், சீன ராணுவத்தின் 68 போர் விமானங்கள்
மற்றும் 13 போர்க்கப்பல்கள் தைவானின் எல்லைக்கோட்டைக் கடந்ததாக, தைவான் ராணுவம் கூறியிருக்கிறது. அதையடுத்து சீனாவுக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் தைவான் பாதுகாப்பு அமைச்சகம், ``கம்யூனிஸ்ட் இராணுவம் வேண்டுமென்றே, தைவானைச் சுற்றியிருக்கும் கடல் மற்றும் வான் எல்லையைக் கடந்து அத்துமீறுவதைக் கண்டிக்கிறோம்" என அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
கருத்துகள்