தமிழகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15 வது உட்கட்சித் தேர்தல்
பல்வேறு கட்டங்களாக ஜனநாயக முறையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், 3 துணைச்செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி துவங்கி 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று முடிந்து.
அக் கட்சியின் சார்பில் நிர்வாக வசதிக்காகப் பிரிக்கப்பட்டுள்ள 72 மாவட்டங்களுக்கும் வேட்பு மனுக்கள் பெறப்பட்ட நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் மாவட்டச் செயலாளர் தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது என்ற நிலையில் திமுக சார்பில் 15வது பொதுத்தேர்தல் தொடர்பான பட்டியல் வெளியானது. அதன்படி திமுகவின் பேரூர், ஒன்றிய, நகர, பகுதி, மாநகர மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, மாவட்ட நிர்வாகிகளின் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.
அதன்படி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை முடிந்த நிலையில், 64 திமுக மாவட்ட செயலாளர்கள் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திமுகவின் 72 மாவட்டச் செயலாளர்களில் 7 மாவட்ட செயலாளர்கள் புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதன் படி கன்னியாகுமரி மேற்கு அமைச்சர் மனோ தங்கராசும், கன்னியாகுமரி கிழக்கு ரெ மகேஷும் , தூத்துக்குடி தெற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு அமைச்சர் கீதாஜீவன், தென்காசி மேற்கு சிவபத்மநாதன்,
திருநெல்வேலி மத்தியில் அப்துல் வஹாப், திருநெல்வேலி கிழக்கு ஆவுடையப்பன், விருதுநகர் தெற்கு அமைச்சர் கேகே எஸஅஎஸஅஆர் ராமச்சந்திரன், விருதுநகர் வடக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு. சிவகங்கை அமைச்சர் கேஆர் பெரியகருப்பன்,
இராமநாதபுரம் காதர்பாட்சா முத்துராமலிங்கம், தேனி தெற்கு இராமகிருஷ்ணன், தேனி வடக்கு தங்க தமிழ்செல்வன், திண்டுக்கல் மேற்கு அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் கிழக்கு செந்தில்குமார், மதுரை மாநகர் கோ தளபதி, மதுரை தெற்கு மு மணிமாறன், மதுரை வடக்கு அமைச்சர் மூர்த்தி. சென்னை தெற்கு அமைச்சர் மா சுப்பிரமணியன், சென்னை தென்மேற்கு மயிலை த வேலு, சென்னை மேற்கு நே. சிற்றரசு, சென்னை கிழக்கு அமைச்சர் பி.கே சேகர்பாபு, சென்னை வடகிழக்கு மாதவரம் எஸ் சுதர்சனம், சென்னை வடக்கு தா. இளங்கோ என்ற இளைய அருணா, விழுப்புரம் மத்தியில் நா புகழேந்தி, விழுப்புரம் வடக்கு மாவட்ட அமைச்சர் செஞ்சி கேஎஸ் மஸ்தான்,
திருவண்ணாமலை தெற்கு அமைச்சர் எ.வ. வேலு, திருவண்ணாமலை வடக்கு எம்.எஸ்.தரணி வேந்தன், வேலூர் மேற்கு (திருப்பத்தூர்) தேவராஜி, வேலூர் மத்தியில் நந்தகுமார், வேலூர் கிழக்கு (ராணிப்பேட்டை) ஆர் காந்தி, காஞ்சிபுரம் தெற்கு சுந்தர், காஞ்சிபுரம் வடக்கு அமைச்சர் தாமோ அன்பரசன், திருவள்ளூர் மேற்கு எஸ் சந்திரன், திருவள்ளூர் மத்திய அமைச்சர் சா மு நாசர், திருவள்ளூர் கிழக்கு டிஜே கோவிந்தராஜன், நாமக்கல் மேற்கு மதுரை செந்தில், நாமக்கல் கிழக்கு கே.ஆர்.என். ராஜேஷ்குமார், சேலம் மத்தியில் ராஜேந்திரன், சேலம் மேற்கு டி.எம். செல்வகணபதி, சேலம் கிழக்கு எஸ்ஆர் சிவலிங்கம், புதுக்கோட்டை தெற்கு அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை வடக்கு செல்வபாண்டியன், கரூர் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, அரியலூர் அமைச்சர் சா.சி சிவசங்கர், பெரம்பலூர் சி ராஜேந்திரன், .
திருச்சிராப்பள்ளி மத்தியில் வைரமணி, திருச்சிராப்பள்ளி தெற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சிராப்பள்ளி வடக்கு தியாகராஜன், திருவாரூர் கலைவாணன், நாகபட்டினம் தெற்கு கௌதமன், நாகபட்டினம் வடக்கு நிவேதா எம் முருகன், தஞ்சாவூர் தெற்கு அண்ணாதுரை, தஞ்சாவூர் மத்தியில் துரை சந்திரசேகரன், தஞ்சாவூர் வடக்கு கல்யாண சுந்தரம், கடலூர் மேற்கு கணேசன், கடலூர் கிழக்கு அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம்,
கள்ளக்குறிச்சி தெற்கு வசந்தம் கார்த்திகேயன், கள்ளக்குறிச்சி வடக்கு தா உதயசூரியன் , நீலகிரி முபாரக், ஈரோடு தெற்கு சு.முத்துசாமி, ஈரோடு என். நல்லசிவம், திருப்பூர் தெற்கு பத்மநாபன், திருப்பூர் வடக்கு செல்வராஜ், கோயமுத்தூர் மாநகர் நா கார்த்திக், கோயமுத்தூர் தெற்கு தளபதி முருகேசன்,
கோயமுத்தூர் வடக்கு தொ.அ. ரவி, கிருஷ்ணகிரி மேற்கு ஒய் பிரகாஷ், கிருஷ்ணகிரி கிழக்கு மதியழகன், தருமபுரி மேற்கு பெ.பழனியப்பன், தருமபுரி கிழக்கு தடங்கம் பெ சுப்பிரமணி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதில் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த மூர்த்திக்குப் பதிலாக செந்தில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளரான செங்குட்டுவனுக்குப் பதிலாக பர்கூர் மதியழகன், கோயமுத்தூர் தெற்கு மாவட்டச் செயலாளர் வரதராஜனுக்குப் பதிலாக தளபதி முருகேசனும்,. கோயமுத்தூர் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த ராமச்சந்திரனுக்குப் பதில் ரவி, திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளரான பூபதிக்குப் பதிலாக சந்திரன், தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளரான இன்பசேகரனுக்கு பதிலாக பழனியப்பன், தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளரான ஏனாதி பாலசுப்பிரமணியத்திற்குப் பதிலாக
அண்ணாதுரை ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.தேர்தல் நடத்தாமலேயே திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமாரை தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளராக தேர்வு செய்ய முயற்சிப்பதாக குற்றம்சாட்டி தென்காசி வடக்கு மாவட்டத்தின் தற்போதைய பொறுப்பாளர் செல்லதுரையின் ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் முன்பு தரையிலமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட நிலையில் குழப்பம் உள்ளது. இதனால் இந்த மாவட்டத்துக்கு மட்டும் மாவட்ட செயலாளர் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் திமுகவின் புதிய அமைப்புச் செயலாளராக அன்பகம் கலை நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் அமைப்பு செயலாளராக இருந்த ஆர்எஸ் பாரதி, திமுக செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள்