தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக வழக்கறிஞர் டாக்டர் பி.ஆனந்தன் நியமனம் செய்யப்பட்டார்.
அவரது தந்தை பஞ்சாட்சரம், தாயார் சரஸ்வதி. 1974 -ஆம் ஆண்டில் சென்னை அருகே பட்டாபிராம் பகுதியில் பிறந்தவர். சென்னையில் அன்றைய அரசு சட்டக்கல்லூரியில் (1992 ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டு வரை) படித்தவர்.
கல்லூரியின் நூற்றாண்டு விழாக் குழு தலைவராக இருந்து அன்று தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி முன்னிலையில் அந்தப் விழாவைச் சிறப்பாக நடத்தியவர்.
மூத்த வழக்கறிஞர் ராஜா இளங்கோவிடம் ஜூனியராகப் பணியாற்றிய பின், தனி வழக்கறிஞர் அலுவலகம் துவங்கி தற்போது 100-க்கும் மேற்பட்ட ஜூனியர் வழக்கறிஞர்களை வைத்து வழக்குத் தொழில் புரிந்து வருகிறார்.
திரைப்பட நடிகர்களான பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட நடிகர்களின் விவாகரத்து வழக்குகளை நடத்தியவர். தற்போது 26-ஆம் ஆண்டாக தொடர்ந்து வழக்கறிஞராக இருந்து வருகின்றார்.
சுயமரியாதைத் திருமணம் செல்லாதென சென்னை உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்து சுயமரியாதை திருமணம் செல்லும் என்ற உத்தரவைப் பெற்றவர்.
மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் K. ஆம்ஸ்ட்ராங் மீது போடப்பட்ட அணைத்து கிரிமினல் வழக்குகளிலும் ஆஜராகி எல்லா வழக்கிலிருந்தும் அவரை எளிதாக விடுவித்தவர்.
ஏராளமான ஏழை ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாணவர்களுக்கு கல்வி கட்டணமும் ஜாதிய ரீதியாகச் செலுத்தி வருகிறார். ஆவடி சுற்றுப்பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆதிதிராவிடர் ஏழை மாணவர்கள் தங்கி படிக்க இலவசமாக இடமும் உணவும் வழங்கி வருகிறார். இவரது ஜாதியும் சார்ந்த சமூக சேவையைப் பாராட்டி அமெரிக்க பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.
தொலைக்காட்சி விவாதங்களிலும் பங்கேற்று சட்ட விளக்கம் அளிப்பவராகிறார். பகுஜன் சமாஜ் கட்சியில் படுகொலை செய்யப்பட்டு மறைந்த மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்குடன் 2006 -ஆம் ஆண்டு முதல் இணைந்து பணியாற்றியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 2009-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டு 41 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி மாநில ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.
கருத்துகள்