ரூபாய்.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாவட்ட தீயணைப்புத் துணை அலுவலர் கைது.
மறைந்திருந்து கையும் களவுமாக பிடித்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை கோழிப் பண்ணைக்கு தடையில்லா சான்று வழங்க லஞ்சம் பெற்ற போது சிக்கினார் சிவகங்கை வட்டம் சூரக்குளம் கற்பகமூர்த்தி. இவர் கோழிப் பண்ணை துவங்க மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலகத்தில் தடையில்லாச் சான்று கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், தடையில்லா சான்றிதழ் தருவதற்கு மாவட்டத் தீயணைப்புத் துறை துணை அலுவலர் நாகராஜன் ரூபாய்.5,000 லஞ்சம் கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கற்பகமூர்த்தி சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் கொடுத்தார்.
அவர்களின் ஆலோசனையின் பேரில், இன்று மாவட்டத் தீயணைப்புத்துறை அலுவலகத்தில் நாகராஜனிடம் கற்பகமூர்த்தி பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய ரூபாய்.5,000 நோட்டுகளை தீயணைப்பு அலுவலரிடம் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் ஜான் பிரிட்டோ, உதவி ஆய்வாளர் ராஜா முகமது உள்ளிடோர் நாகராஜனை லஞ்சம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்த பிறகு விசாரணை நடத்தினர் அதன் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கருத்துகள்