மாரடைப்பால் உயிரிழந்த ராகேஷ் பால் உடலுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் அஞ்சலி!
இந்தியக் கடலோரக் காவல்படைத் தலைமை இயக்குநர் ராகேஷ் பால் நெஞ்சுவலியால் சென்னையில் நேற்றுக் காலமானார். அவருக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி. சென்னை கடலோரக் காவல்படையின் கடல்சார் மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தின் புதிய கட்டிடத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார். இந்த விழாவை ஒருங்கிணைக்கும் பணிகளை இந்தியக் கடலோரக் காவல்படையின் தலைமை இயக்குநர் ராகேஷ் பால் மேற்கொண்ட நிலையில் மத்திய அமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த ராகேஷ் பாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அவர் உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை ராகேஷ் பால் உயிரிழந்தார். அவருக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங், முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
கருத்துகள்