யூடியூப்பர் சவுக்கு சங்கர் வழக்குகளை விசாரிக்கவோ ! நடவடிக்கை எடுக்கவோ கூடாதென உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
யூடியூப்பர் சவுக்கு சங்கர் வழக்குகளை விசாரிக்கவோ ! நடவடிக்கை எடுக்கவோ கூடாதென உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
யூடியூப்பர் சவுக்கு சங்கர் மீதான வழக்குகளின் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றத்தில் இன்று உத்தரவிடப்பட்டது.பெண் காவலர்கள் மற்றும் உயர் காவல்துறை அலுவலர்களை அவதூறாகப் பேசியதான வழக்கில் சவுக்கு சங்கர் கோயம்புத்தூர் பூஜியக் குற்றத் தடுப்புக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் மீது சென்னை, சேலம், திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது.
தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்த சவுக்கு சங்கர், மற்றும் அவர் தாயார் ஆகியோர் ஒவ்வொரு வழக்கிலுமாக ஜாமின் பெற்று வந்தார். இந்த நிலையில் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி,
அவரது தாயார் கமலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு HCP தாக்கல் செய்தார்.கடந்த ஆகஸ்ட் மாதம்.,9 ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சவுக்கு சங்கர் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், அவர் மீதுள்ள பிற வழக்குகளில் ஜாமின் பெறத் தேவையில்லை எனில்,
விடுதலை செய்யவும் உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து, அவர் மீதுள்ள அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுவிக்குமாறு சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில், சவுக்கு சங்கர் மீது தேனி நகரக் காவல்துறை ஆய்வாளர் உதயகுமார் தலைமையிலான காவல்துறையினர், குண்டர் சட்டத்தில் மீண்டும் வழக்குப்பதிவு செய்தனர்.
அது சவுக்கு சங்கர் தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஜாமின் வழங்கிய பிறகும், சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதா ? என தமிழ்நாடு அரசுக்கு தலைமை நீதிபதி நேரடியாகவே கேள்வி எழுப்பினார்.
மேலும், அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளின் விபரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், சவுக்கு சங்கர் மீதான வழக்குகளின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தும் ஆணை பிறப்பித்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கவும் தமிழ்நாடு அரசுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது,
கருத்துகள்