முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பத்ம விருது வழங்கும் முதற்கட்ட விழாவில் குடியரசுத்தலைவர் பத்ம விருதுகளை வழங்கினார்

பத்ம விருது வழங்கும் முதற்கட்ட விழாவில் குடியரசுத்தலைவர் பத்ம விருதுகளை வழங்கினார்

குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (மே 25, 2026)  நடைபெற்ற பத்ம விருது வழங்கும் முதற்கட்ட விழாவில் 2026-ம் ஆண்டிற்கான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 





தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழு பேருக்கு 2026-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கினார்

புதுதில்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (25.05.2026) நடைபெற்ற  விருது வழங்கும் விழாவில், 2026-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு  வழங்கினார்.  பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கிய தமிழ்நாட்டைச் சேரந்த ஏழு பேருக்கு பத்மவிருதுகள் வழங்கப்பட்டன.





மருத்துவத் துறையில் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, புகழ்பெற்ற இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் கல்லிப்பட்டி ராமசாமி பழனிசாமி பத்ம பூஷன்  விருது பெற்றார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இரைப்பை குடல் மருத்துவத் துறையை நிறுவினார். ராமகிருஷ்ண மடத்தின் மருத்துவமனையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னார்வச் சேவை புரிந்து வரும் இவர், தனது சொந்த கிராமமான கல்லிப்பட்டியின் உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தியுள்ளார். மேலும், 2007-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2022-ல் உலக இரைப்பை குடல் அமைப்பின் மிக உயரிய விருதான 'மாஸ்டர்ஸ் அவார்டும்' பெற்ற பெருமைக்குரியவர்.

மருத்துவச் சேவை மற்றும் பொதுவாழ்வில் சிறந்து விளங்கிய 99 வயது மூத்த மருத்துவர் டாக்டர் எச் வி ஹண்டே பத்மஸ்ரீ  விருது பெற்றார். தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரான (1980–1986) இவர், போலியோ மற்றும் தட்டம்மை நோய்களை ஒழிப்பதில் முக்கியப் பங்காற்றியதோடு 'டாக்டர் பி. சி. ராய் விருதையும்' பெற்றுள்ளார். மேலும், கம்பராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளதுடன் பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

கலைத் துறையில், நீலகிரி மாவட்டத்தின் ஆலு குறும்பர் சமூகத்தின் பாரம்பரிய 'அஜிலே பொட்டு' ஓவியக்கலையை இயற்கை நிறங்களைப் பயன்படுத்தி மீட்டெடுத்துப் பிரபலப்படுத்திய திரு ஆர் கிருஷ்ணன் கிட்னாவுக்கு அவரது மறைவுக்குப் பின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. பழங்குடியின வனம் சார்ந்த மரபுகள் மற்றும் கதை சொல்லும் கலையைப் பாதுகாப்பதில் இவர் தனது வாழ்நாளை அர்ப்பணித்து, 2025-ம் ஆண்டு தனது மறைவு வரை கலைப் பயிற்சி அளிப்பதில் உறுதியாக இருந்தார்.

மத்திய ரிசர்வ் காவல் படையின் முன்னாள் தலைமை இயக்குநரான திரு கே விஜய் குமார், பொதுச் சேவைக்காக பத்மஸ்ரீ விருதுடன் கௌரவிக்கப்பட்டார். நக்சல் தீவிரவாத ஒழிப்பு, வீரப்பனைப் பிடிப்பதற்கான சிறப்பு அதிரடிப் படைத் தலைமை, ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு மேலாண்மை, 26/11 மும்பை தாக்குதல்களுக்குப் பிறகு உத்திசார் பிரிவை உருவாக்கியது எனப் பல்வேறு பணிகளுக்காக இவர் அறியப்படுகிறார்.

இலக்கியத் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பங்களித்து வரும் புகழ்பெற்ற எழுத்தாளர் திருமதி சிவசங்கரி பத்மஸ்ரீ விருது பெற்றார். 18 இந்திய மொழிகளின் படைப்புகளைத் தொகுத்து, 16 ஆண்டுகள் உழைப்பில் இவர் உருவாக்கிய "நிட் இந்தியா த்ரூ லிட்ரேச்சர்" என்ற நூல் தேசிய ஒருமைப்பாட்டிற்கான ஒரு பெரும் சாதனையாகும்.

"இந்திய சமூக வானொலியின் தந்தை" என்று அழைக்கப்படும் மூத்த வானொலி ஒலிபரப்பாளர் டாக்டர் ஆர் ஸ்ரீதர் பத்மஸ்ரீ விருது பெற்றார். இவர் இந்தியாவின் முதல் சமூக வானொலி நிலையத்தை வடிவமைத்ததுடன், ஞானவாணி மற்றும் ஞான தர்ஷன் ஆகியவற்றைத் தொடங்குவதிலும் முக்கியப் பங்காற்றினார்.

தமிழ் இசை மற்றும் பக்தி இலக்கியத் துறையில், 55 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் பண் இசையில் திருமுறை பாடி வரும் புகழ்பெற்ற ஓதுவர் திரு என் சுவாமிநாதன்  பத்மஸ்ரீ விருது பெற்றார். பல கோவில்களில் ஓதுவராகப் பணியாற்றிய இவர், 26 ஆண்டுகள் திருத்தணி முருகன் கோவிலில் இசைப் பணியாற்றினார். தேவாரப் பாடல்களைப் பாடுவதில் வல்லவரான இவர், உலகெங்கிலும் பல நாடுகளில் கச்சேரிகள் செய்துள்ளார்.

நாடு முழுவதிலுமிருந்து மொத்தம் 66 சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

பத்ம விருது பெற்றவர்களது பட்டியலை  இந்த இணைப்பில் காணலாம்: https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/may/doc2026525876101.pdf

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...