சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலுள்ள 21 வளாகங்களில் அமலாக்கத்துறையினர்
சென்னை மண்டல அலுவலகம், 29.06.2026 அன்று அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் ஆட்சேர்ப்புத் தேர்வில் OMR விடைத்தாள்களில் குளறுபடியான வழக்கு தொடர்பாக நடத்திய சோதனையில், பல்வேறு குற்றச் சாட்டு ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள், சொத்து தொடர்பான ஆவணங்கள், ரூபாய் 13.18 லட்சம் ரொக்கம் ஆகியவை மீட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
கூடுதலாக, 56 வங்கி கணக்குகள் மற்றும்ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்திய பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக, ஜூன் மாதம் தமிழ்நாடு சென்னை, கோயம்பத்தூர் திருச்சிராப்பள்ளி, மதுரை உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட நகரங்களில் சில இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகளின் திடீர் சோதனையில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது கடந்த 2017-ஆம் ஆண்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட TRB தேர்வில் முறைகேடு நடந்தது.அதில் OMR தாள்கள் மாற்றம், தேர்வு முடிந்த பிறகு, ஸ்கேன் செய்யும் பணியின் போது முறையற்ற வகையில் விண்ணப்பதாரர்களின் ஓ.எம்.ஆர் (OMR) விடைத்தாள்கள் மாற்றப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்ட இடைத்தரகர்கள் மூலம் பல விண்ணப்பதாரர்கள் ரூபாய் .25 லட்சம் முதல் ரூபாய் .30 லட்சம் வரை லஞ்சம் கொடுத்துள்ளதாகவும், 196 பேர் வரை பயன்பெற்றுள்ளதாகவும் அமலாக்கத்துறை விசாரணையில் கண்டறியப்பட்டது. அது தொடர்பான ஆவணங்கள் முறைகேட்டின் மூலம் ஈட்டப்பட்ட பணப் பரிமாற்றப் பாதையைக் (Money Trail) கண்டறியும் நோக்கில் நிதி ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் முக்கியப் பத்திரங்கள் சோதனையின் போது கைப்பற்றப்பட்டன. இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்ட இடைத்தரகர்கள் மூலம் பல விண்ணப்பதாரர்கள் லஞ்சம் கொடுத்து 196 பேர் வரை பயன்பெற்றுள்ளதாகவும் அமலாக்கத்துறை விசாரணையில் கண்டறியப்பட்டதன் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்ட. 56 வங்கி கணக்குகள், 2 டீமேட் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்றும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. மதிப்பெண் முறைகேடு தொடர்பாக, அமலாக்கத்துறை கடந்த இரு தினங்களாக சென்னை மண்டல அலுவலகம், 21 இடங்களில் சோதனை நடத்தியது. இந்த சோதனையின் முடிவில், ரூபாய் .9.67 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.



கருத்துகள்