தில்லைக்கும், திருவரங்கத்திற்கும் பொன் வேய்ந்த பெருமாள் பாண்டியன் மன்னர் முதலாம் ஜடையவர்மன் சுந்தரபாண்டியன்
"கண்டவர் மனமும் கண்ணும் களிப்ப வெண்டிரை மகர வேலை கொடுபண்டியன் ஆயிரம் பணைபணத் தனந்தன் மீமிசைப் பாயல் கொள்ளும் பரம யோகத்து ஒரு பெருங்கடவுளும் வந்தினிதுறையும் பெருங்காவிரியிடை நிலத் திலங்கு திருவரங்கம் பெருஞ்செல்வம் சிறப்பப் பன்முறை யணிதுலாபாரமேறிப்பொன்மாலையன்ன பொலிந்து தோன்றவும் பொன் வேய்ந்தருளிய செம்பொற் கோயிலுள் வளந்திகழ் மாஅல் உதய வெற்பெயவர்மன் திருவளர் குலமணிச் சிங்காசனமிசை மரகத மலையென மகிழ்ந்தின தேறிந்தரபாண்டியன்"
பாண்டிய மன்னர் முதலாம் ஜடையவர்மன் சுந்தரபாண்டியன் பொது ஆண்டு 1251 முதல் 1271 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னர் இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இறப்பிற்குப் பின்னர் முடிசூடினான். மஹாராஜாதி இராஜ ஸ்ரீபரமேஷ்வரன்,எம்மண்டலமும் கொண்டருளியவன், எல்லாம் தலையானான் பெருமாள், கச்சி வழங்கும் பெருமாள், கோதண்டராமன் போன்ற பட்டப்பெயர்களினைஉடையவனது காலத்தில் பாண்டிய நாட்டில் சிறப்பான ஆட்சி நிலவியது. சித்திரை மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவனான மன்னன் பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் சிறப்புற்று விளங்கியது குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் இறுதிச்சோழ மன்னனாக அறியப்படும் மூன்றாம் இராசேந்திரன் காலத்தில் சோழர் வம்சம் முற்றிலும் அழிந்ததற்கான காரணங்களில் இம்முதலாம் ஜடையவர்மன் சுந்தரபாண்டியனின் சோழ நாட்டுப் படையெடுப்பும் ஒரு முக்கியக் காரணமாகும். சேர மன்னன் வீரரவி உதயமார்த்தாண்டவர்மன் மீது படையெடுத்து வெற்றி கொண்டான் முதலாம் ஜடையவர்மன் சுந்தரபாண்டியன்.
மூன்றாம் இராசராசன் மகனான மூன்றாம் இராசேந்திரனையும் வென்று திறை செலுத்துமாறு ஆணையிட்டான் முதலாம் ஜடையவர்மன் சுந்தரபாண்டியன்.
போசளர் கண்ணனூரினைத் தற்போது சமயபுரம் தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த சமயம் முதலாம் ஜடையவர்மன் சுந்தரபாண்டியன் போசள மன்னனான வீரசோமேஷ்வரனைத் தோற்கச் செய்து தண்ட நாயகன் சிங்கணனை கொன்று கண்ணனூரினை மீட்டான்.
கண்ணனூரில் நடைபெற்ற கொப்பத்துப் போரில் போசாள மன்னன் வீரராம நாதனை தோற்கடித்து அவன் தளபதி சோமனைக் கொன்றான்.
இலங்கையின் திரிகோணமலையில் ஆட்சி செய்த தம்பர்லிங்கா (தாய்லாந்து) அரசன் சந்திரபானுவின் மீது படையெடுத்து வெற்றி பெற்று யானைகள் மற்றும் மணிகள் அனைத்தினையும் திறையாகப் பெற்றான்.
பல்லவர்களின் வழித் தோன்றல்களான காடவர் குல மன்னனான கோப்பெருஞ்சிங்கனைப் போரில் வென்று அவனது தலைநகரான சேந்தமங்கலத்தை முற்றுகையிட்டுக் கைப்பற்றினான். காடவ மன்னனின் யானை,குதிரை மற்றும் பிற செல்வங்கள் அனைத்தினையும் கவர்ந்து கொண்டு சேந்தமங்கலத்தினை ஆளும் பொறுப்பினைக் கோப்பெருஞ்சிங்கனிடமே திரும்ப அளித்தான். தற்போது
சேலம் மாவட்டத்தின கிழக்கும் தென்னார்க்காட்டின மேற்குப் பகுதிகளுமான மகத நாட்டினை வாணர்களான வாணாதிராசர், வாணகோவரையர் போன்றவர்களிடமிருந்து கைப்பற்றி ஆத்தூர் அருகிலுள்ள அகழியூர - அறகழூரினைத் தலைநகராக்கிப் பின் கொங்கு நாட்டினையும் கைப்பற்றி ஆட்சி புரிந்தான் முதலாம் ஜடையவர்மன் சுந்தரபாண்டியன்.
தெலுங்குச் சோழ மன்னனான விஜயகண்ட கோபாலனை போரில் கொன்று காஞ்சி மாநகரைக் கைப்பற்றி விஜயகண்ட கோபாலனின் தம்பிக்கு ஆட்சிப் பொறுப்பினை அளித்தான். வடநாடு சென்று காக்கத்தீய மன்னன் கணபதியைப் போரில் வென்றான். நெல்லூரைக் கைப்பற்றி வீராபிடேகம் செய்துகொண்டான்.சிதம்பரம் தில்லையம்பதியில் உள்ள திருமால்,சிவன் கோயில்களுகுத் துலாபார தானங்களை வழங்கினான். தில்லை நடராசப் பெருமானின் கோயில் கோபுரத்திற்குப் பொன்தகடு வேய்ந்து,அங்குள்ள நான்கு ராஜகோபுரங்களில் மேற்குக் கோபுரத்தினைக் கட்டினான் அக்கோபுரமும் சுந்தரபாண்டியன் கோபுரம் எனப் பெயர் பெற்றது.
திருச்சிராப்பள்ளியில் உள்ள ஸ்ரீரங்கம் திருவரங்கம் என அழைக்கப்படும். திருமாலை வணங்கிய முதலாம் ஜடையவர்மன் சுந்தரபாண்டியன் ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டுள்ள பெருமானின் கோபுரத்தை வேய்ந்து அக்கோயிலிலேயே முடிசூடியும் கொண்டான்.கோயில் கைங்கர்யப் பணிகளுகாக நிலங்களினைக் காணிக்கையாக அளித்து அக்கோயில் இறைவனுக்கு அணிகலன்கள் பலவனவற்றை அளித்தான்.இக்கோயிலில் வடமொழியில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் இவனது பணிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.இவன் செய்த பணிகள் காரணமாக "கோயில் பொன் வேய்ந்த பொருள்" என்ற பட்டத்தினைப் பெற்றான்.இவனது படிமங்கள் பல பட்டப்பெயருடன் திருவரங்கத்திலும் பிற இடங்களிலும் அமைக்கப்பட்டன. திங்கள் தோறும் தனது பிறந்தநாளான மூலநாளில் விழா நடத்த ஏற்பாடு செய்யச்சொல்வானெனவும் சித்திரைத் திங்கள் மூலநாளில் திருவானைக்காவல் திருக்கோயிலில்,"சேரனை வென்றான்" என்ற பெயருடைய திருவிழாவொன்றை நடத்தி வைத்து மூன்று ஊர்களை நிவந்தமாக்கினான் என்பதும் வரலாற்றுப் பார்வை
தெலுங்குச் சோழனை வென்று காஞ்சி நகரைக் கைப்பற்றிய காரணத்தினால் காஞ்சீபுர வராதீசுவரன்,காஞ்சீபுரங்கொண்டான் போன்ற பட்டங்களினையும் எல்லாந் தலையனானான் என்ற சிறப்புப் பெயரினையும் பெற்றான். காஞ்சியிலும் வீராபிடேகம் செய்தான் முதலாம் ஜடையவர்மன் சுந்தரபாண்டியன். கச்சீசுவரர் கோயில் மற்றும் வரதராஜப் பெருமாள் கோயில் இரண்டிற்கும் திருப்பணிகள் செய்தான்.காஞ்சீபுரம் திருப்புட்குழித் திருமால் கோயிலில் இவனைப் பற்றி ள்ள வாழ்த்துப்பா பாடலில்
"வாழ்க கோயில் பொன்வேய்ந்த மகிபதி வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன் வாழ்க மண்டலம் யாவையும் கொண்டவன் வாழ்க சுந்தர பாண்டியன் தென்னனே" எனக் காணலாம்,
பெருமாள் குலசேகர தேவர் திருத்தோளுக்கு நன்றாக. எடுத்தகை அழகியான் பல்லவராயர் செய்வித்த தன்மம். எனப் பதிவில் உள்ளது.
















கருத்துகள்