இந்திய சட்ட வரலாற்றில் முதன்முறையாக, லா ஃபார்ம்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் மற்றும் கட்டாயப் பதிவு,
இந்திய சட்ட வரலாற்றில் முதன்முறையாக, லா ஃபார்ம்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் மற்றும் கட்டாயப் பதிவு,
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சிலின் புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்ட நிலையில், புதிய மாநில பார் கவுன்சில் தனது முதல் கூட்டத்தை நடத்தி அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்கும் வரை, அத்தியாவசிய சட்டப்பூர்வ, நிதி மற்றும் நிர்வாகப் பணிகள் தடையின்றி நடைபெறுவதற்காக பார் கவுன்சில் ஆஃப் இந்தியா (BCI ) 31.07.2026 அன்று 9 பக்கங்களைக் கொண்ட விரிவான இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது .தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் முடிவுகள் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட உயர் மட்டக் குழுவால் ஜூலை 2026-ல் வெளியிடப்பட்டன. இதில் பி.எஸ்.அமல்ராஜ் , கே. பாலு, எம். வேல்முருகன் ஆகியோர் வெற்றி பெற்ற முக்கிய உறுப்பினர்களாவர்.தேர்தல் மார்ச் 30, 2026 ல் நடந்த வாக்குப்பதிவு சதவீதம்: 81 சதவீதம் மொத்த இடங்கள்: 23 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் (2 நியமன இடங்கள் தவிர்த்து) முன்னுரிமை வாக்கு முறையில் 86 நாட்கள் நடைபெற்றது. முக்கிய வெற்றி பெற்றவர்கள்பி.எஸ். அமல்ராஜ் (முன்னாள் தலைவர்) கே. பாலு, ஆர்.சி. பால் கனகராஜ், எம். வேல்முருகன், ஜி.மோகனகிருஷ்ணன், டி. பிரசன்னா,இ. பாலமுருகன்,சி. பரணிதரன் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் விரைவில் கவுன்சிலின் தலைவர் மற்றும் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள்
.தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சிலின் புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்ட நிலையில், புதிய மாநில பார் கவுன்சில் தனது முதல் கூட்டத்தை நடத்தி அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்கும் வரை, அத்தியாவசிய சட்டப்பூர்வ, நிதி மற்றும் நிர்வாகப் பணிகள் தடையின்றி நடைபெறுவதற்காக பார் கவுன்சில் ஆஃப் இந்தியா (BCI ) 31.07.2026 அன்று 9 பக்கங்களைக் கொண்ட விரிவான இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது .தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் முடிவுகள் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட உயர் மட்டக் குழுவால் ஜூலை 2026-ல் வெளியிடப்பட்டன. இதில் பி.எஸ்.அமல்ராஜ் , கே. பாலு, எம். வேல்முருகன் ஆகியோர் வெற்றி பெற்ற முக்கிய உறுப்பினர்களாவர்.தேர்தல் மார்ச் 30, 2026 ல் நடந்த வாக்குப்பதிவு சதவீதம்: 81 சதவீதம் மொத்த இடங்கள்: 23 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் (2 நியமன இடங்கள் தவிர்த்து) முன்னுரிமை வாக்கு முறையில் 86 நாட்கள் நடைபெற்றது. முக்கிய வெற்றி பெற்றவர்கள்பி.எஸ். அமல்ராஜ் (முன்னாள் தலைவர்) கே. பாலு, ஆர்.சி. பால் கனகராஜ், எம். வேல்முருகன், ஜி.மோகனகிருஷ்ணன், டி. பிரசன்னா,இ. பாலமுருகன்,சி. பரணிதரன் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் விரைவில் கவுன்சிலின் தலைவர் மற்றும் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள்
.27.07.2026 தேதியிட்ட கூட்டுப் பிரதிநிதித்துவம் மற்றும் 26.07.2026 தேதியிட்ட பிரதிநிதித்துவம் – 16.07.2026 மற்றும் 17.07.2026 தேதியிட்ட பாரத வழக்கறிஞர் கவுன்சில் (BCI) கடிதங்கள்
வழக்கறிஞர் ஜே. பிரிஸில்லா பாண்டியன், டி. சரவணன் மற்றும் என். மரப்பன் ஆகியோர் 27.07.2026 அன்று அளித்த கூட்டுப் பிரதிநிதித்துவமும், வழக்கறிஞர் கே. பாலு 26.07.2026 அன்று அளித்த பிரதிநிதித்துவமும், BCI மூலம் பரிசீலிக்கப்பட்டது.
இதுகுறித்து, 16.07.2026 மற்றும் 17.07.2026 தேதியிட்ட BCI கடிதங்களில் அறிவிக்கப்பட்ட Limited Interim Arrangement (வரையறுக்கப்பட்ட இடைக்கால ஏற்பாடு) மாற்றமின்றி தொடர்கிறது என்பதும்
இந்த ஏற்பாடு முற்றிலும் தற்காலிகமானது. பெண்களுக்கான பிரதிநிதித்துவம் தொடர்பான நீதிமன்ற உத்தரவுகள் முழுமையாக செயல்படுத்தப்பட்டு, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில பார் கவுன்சில் பொறுப்பேற்கும் வரை, அத்தியாவசிய சட்டப்பூர்வ, நிர்வாக மற்றும் நிதி நடவடிக்கைகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்காக மட்டுமே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் Advocate General, Ex-Officio உறுப்பினராக, இந்த இடைக்கால ஏற்பாட்டை மேற்பார்வையிட அதிகாரம் பெற்றுள்ளார்.
மேலும், BCI துணைத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான எஸ். பிரபாகரன், BCI சார்பில் இந்த ஏற்பாட்டை ஒருங்கிணைத்து கண்காணிக்க அதிகாரம் பெற்றுள்ளார்.
16.07.2026 மற்றும் 17.07.2026 தேதியிட்ட கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற உறுப்பினர்கள், அந்தக் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட பணிகளை மட்டும் மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பார் கவுன்சிலின் செயலாளர், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும், இந்த இடைக்கால ஏற்பாட்டை நடைமுறைப்படுத்தத் தேவையான முழு நிர்வாக ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இந்த ஏற்பாட்டின் கீழ் செயல்படும் அனைவரும், 16.07.2026 மற்றும் 17.07.2026 தேதியிட்ட BCI கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகள், நிபந்தனைகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு மட்டுமே செயல்பட வேண்டும்.
பாரத வழக்கறிஞர் கவுன்சிலின் முன் எழுத்துப்பூர்வமான அனுமதி இன்றி, நிரந்தர விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய எந்த முக்கியக் கொள்கை முடிவோ அல்லது நடவடிக்கையோ எடுக்கக் கூடாது.
27.07.2026 தேதியிட்ட கூட்டுப் பிரதிநிதித்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இந்தக் கடிதம் எந்த அதிகாரி, ஊழியர் அல்லது வேறு எந்த நபருக்கும் எதிராக குற்றச்சாட்டு அல்லது இறுதியான முடிவை பதிவு செய்வதாகக் கருதப்படாது.
வழக்கறிஞர் கே. பாலு 26.07.2026 அன்று அளித்த, 16.07.2026 மற்றும் 17.07.2026 தேதியிட்ட கடிதங்களை திரும்பப் பெறவோ அல்லது நிறுத்தி வைக்கவோ கோரிய பிரதிநிதித்துவமும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அது உரிய அதிகாரியின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்.
எனினும், அந்தப் பிரதிநிதித்துவம் தாக்கல் செய்யப்பட்டதாலோ அல்லது அது நிலுவையில் இருப்பதாலோ, தற்போதைய BCI உத்தரவுகள் தானாகவே நிறுத்தப்படவோ, இடைநிறுத்தப்படவோ அல்லது மாற்றப்படவோ மாட்டாது.
எனவே, 16.07.2026 மற்றும் 17.07.2026 தேதியிட்ட பாரத வழக்கறிஞர் கவுன்சிலின் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிலைப்பாடு மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது.
அந்த அறிவுறுத்தல்கள், பாரத வழக்கறிஞர் கவுன்சிலின் உரிய அதிகாரியால் எழுத்துப்பூர்வமாக மாற்றப்படவோ, ரத்து செய்யப்படவோ அல்லது இடைநிறுத்தப்படவோ செய்யப்படும் வரை முழுமையாக அமலில் இருக்கும். அனைத்து சம்பந்தப்பட்டவர்களும் அவற்றை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
இந்த அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் உண்மையான சிரமம் ஏதேனும் இருந்தால், அது எழுத்துப்பூர்வமாக பாரத வழக்கறிஞர் கவுன்சிலின் கவனத்திற்கு கொண்டு வரலாம். ஆனால், அதனை காரணமாகக் கொண்டு யாரும் ஒருதலைப்பட்சமாக தற்போதைய அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் இருக்கவோ, மாற்றவோ அல்லது விலகிச் செயல்படவோ முடியாது.
இந்திய பார் கவுன்சில் (BCI), வழக்கறிஞர் தொழிலை நவீனப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் சமீபத்தில் இரு முக்கிய விரிவான வரைவு அறிக்கைகள் மற்றும் சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளது. இதில் 1961 ஆம் ஆண்டின் வழக்கறிஞர்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான 'வழக்கறிஞர்கள் (திருத்தம்) மசோதா 2026' வரைவு அறிக்கை மிகவும் முதன்மையானதாகும்.
இந்த சமீபத்திய அறிக்கைகளின் முக்கிய அம்சங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன:
1.வழக்கறிஞர்கள் (திருத்தம்) மசோதா, 2026 (Draft Advocates Bill)
சட்ட நிறுவனங்களுக்கு (Law Firms) அங்கீகாரம்: இந்திய சட்ட வரலாற்றில் முதன்முறையாக, லா ஃபார்ம்களுக்கு (Law Firms) சட்டப்பூர்வ அங்கீகாரம் மற்றும் கட்டாயப் பதிவு முறையை இந்த வரைவு அறிக்கை பரிந்துரைக்கிறது.
நுழைவுத் தேர்வு அறிமுகம்: நாடு முழுவதும் உள்ள சட்டக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முறைப்படுத்த பொது நுழைவுத் தேர்வு நடத்தும் அதிகாரத்தை பார் கவுன்சிலுக்கு வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வழக்கறிஞர்களுக்கான விதிகள்: வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இந்தியாவில் சர்வதேச வணிகக் சமரச நடுவர் (International Commercial Arbitration) வழக்குகளில் மட்டுமே பங்கேற்க முடியும்; இந்திய நீதிமன்றங்களில் வாதிட முடியாது என விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
பதிவுக் கட்டணச் சலுகை: புதிய வழக்கறிஞர்களின் பதிவுக் கட்டணத்தை மாற்றியமைக்க பரிந்துரைக்கும் அதே வேளையில், SC, ST மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு 75% கட்டணச் சலுகை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.
2.டிஜிட்டல் நடத்தை மற்றும் சமூக ஊடகக் கோடு (Digital Ethics Guidelines)
நீதிமன்றங்களின் மாண்பைக் காக்கும் பொருட்டு, 37 பக்கங்கள் கொண்ட விரிவான டிஜிட்டல் ஒழுக்கக் கட்டுப்பாட்டுச் சுற்றறிக்கையை BCI வெளியிட்டுள்ளது:
நீதிமன்ற வளாகத்தில் 'ரீல்ஸ்' தடை: வழக்கறிஞர்கள் நீதிமன்ற அறைகள், வளாகங்கள் அல்லது அறைகளில் (Chambers) வீடியோக்கள், ரீல்ஸ் (Reels) மற்றும் ஷார்ட்ஸ் எடுக்கக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
விளம்பரக் கட்டுப்பாடுகள்: "சில நாட்களில் விவாகரத்து", "உத்தரவாத ஜாமீன்" போன்ற கவர்ச்சிகரமான விளம்பர வாசகங்களை சமூக வலைதளங்களில் வழக்கறிஞர்கள் பயன்படுத்தக் கூடாது.
AI மற்றும் டீப்ஃபேக் பயன்பாடு: வழக்கறிஞர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளிலோ அல்லது கிளையன்ட் ஆவணங்களிலோ AI கருவிகள் மற்றும் டீப்ஃபேக் (Deepfakes) தொழில்நுட்பங்களைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என உறுதிமொழிப் பத்திரம் (Undertaking) சமர்ப்பிக்க வேண்டும்.
3 சட்டக் கல்வி சீர்திருத்தங்கள்
கல்லூரிகள் ஆய்வு: தரம் குறைந்த சட்டக் கல்லூரிகளைக் கண்டறிய, நாடு முழுவதும் உள்ள அனைத்து சட்டக் கல்வி மையங்களையும் உடனடியாக நேரடி ஆய்வு (Physical Inspection) செய்து 6 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க பல்கலைக்கழகங்களுக்கு BCI உத்தரவிட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட வழக்கறிஞர்கள் வரைவுத் திருத்த மசோதா, 2026 மீதான பொது மக்கள் மற்றும் தரப்பினரின் கருத்துகளைப் பெறுவதற்கான காலக்கெடுவை இந்திய பார் கவுன்சிலின் அதிகாரப்பூர்வ தளம் வழங்கியுள்ளது.கேரள பார் கவுன்சிலில் BCI அமைத்த இடைக்கால நிர்வாக குழு ஏற்பாட்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் இடைக்கால தடை !
Case Details Yeshwanth Shenoy v. Bar Council of India & Others W.P.(C) No. 26232 of 2026 Connected Case: W.P.(C) No. 25168 of 2026 Court: Kerala High Court Judge: Justice Bechu Kurian Thomas
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட XIII Bar Council of Kerala-வின் முதல் கூட்டம் நடைபெறும் வரை, இந்திய பார் கவுன்சில் (BCI) தலைவர் அமைத்திருந்த Limited Interim Authority-க்கு கேரள உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
Justice Bechu Kurian Thomas முன்னிலையில் விசாரணைக்கு வந்த W.P.(C) No. 26232 of 2026 – Yeshwanth Shenoy v. Bar Council of India & Others மற்றும் அதனுடன் தொடர்புடைய W.P.(C) No. 25168 of 2026 ஆகிய இணைந்த வழக்குகளில் இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது,
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கேரள மாநில பார் கவுன்சில் தேர்தல் நடைபெற்றது. அதன் பின்னர் 16.06.2026 அன்று XIII-வது கேரள மாநில பார் கவுன்சில் கேரள அரசிதழில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், புதிய கவுன்சிலின் முதல் கூட்டம் நடைபெறும் வரை Enrolment, Sanad, All India Bar Examination (AIBE), Certificate of Practice, Advocates' Welfare Fund உள்ளிட்ட அன்றாட நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள 24.06.2026 அன்று BCI தலைவர் Limited Interim Authority-யை அமைத்தார். பின்னர் 30.06.2026 அன்று அந்த இடைக்கால நிர்வாக அமைப்பில் முன்னாள் தலைவர் அஜீத் T.S.-யும் இணைக்கப்பட்டார்.
மனுதாரர் அட்வகேட் யேஷ்வந்த் ஷெனாய், Advocates Act, 1961-ன் Section 58 புதிய மாநில பார் கவுன்சில் பொறுப்பேற்கும் இடைக்கால சூழ்நிலையை ஏற்கனவே ஒழுங்குபடுத்தியுள்ள நிலையில், BCI தலைவருக்கு தனிப்பட்ட முறையில் புதிய இடைக்கால நிர்வாக அமைப்பை உருவாக்கும் சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என்று வாதிட்டார்.
மேலும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில பார் கவுன்சில் அரசிதழில் அறிவிக்கப்பட்ட பின்னரும், அதன் முதல் கூட்டம் கூட்டப்படாமல் இடைக்கால நிர்வாக அமைப்பு தொடர்வது Advocates Act, 1961-க்கு முரணானது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
முதற்கட்ட பார்வையில், BCI தலைவர் பிறப்பித்த உத்தரவுகள் Advocates Act, 1961-ன் சட்டத் திட்டத்திற்கு (Scheme of the Act) முரணாகவும், உரிய பரிசீலனை இன்றியும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இதையடுத்து 24.06.2026 மற்றும் 30.06.2026 தேதியிட்ட BCI உத்தரவுகளின் செயல்பாட்டுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
மேலும், XIII-வது கேரள மாநில பார் கவுன்சிலின் முதல் கூட்டம் நடைபெறும் வரை கேரள மாநில Advocate General மற்றும் Bar Council of Kerala செயலாளர் ஆகியோர் அதிகாரப்பூர்வ கையொப்பமிடுபவர்களாக (Authorised Signatories) செயல்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், முன்னாள் தலைவர் அஜித் T.S. ன் பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும், தற்போது வழங்கப்பட்ட Enrolment Certificates-ல் அவரது பெயர் Chairman, Bar Council of Kerala என இடம்பெற்றிருப்பதையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டது. பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அவரது பெயரில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதற்கு நீதிமன்றம் ஆட்சேபனை தெரிவித்தது.
இதுபோன்ற சூழ்நிலையில், தற்போதைய Enrolment Certificates-களில் கேரள மாநில Advocate General மற்றும் Bar Council of Kerala செயலாளர் ஆகியோரே அதிகாரப்பூர்வ கையொப்பமிடுபவர்களாக இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிலை கேரள வழக்கில் சவாலுக்குள்ளானது போலவே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பார் கவுன்சிலுக்கும், BCI 16.07.2026, 17.07.2026 மற்றும் 27.07.2026 ஆகிய தேதிகளில் வெளியிட்ட அறிவிப்புகள் மற்றும் விளக்கங்களின் மூலம் Limited Interim Arrangement-ஐ நடைமுறைப்படுத்தியுள்ளது.
அந்த இடைக்கால ஏற்பாட்டின் கீழ், புதிய மாநில பார் கவுன்சில் முழுமையாக பொறுப்பேற்கும் வரை குறிப்பிட்ட நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்காக BCI ஏற்பாடுகளை செய்துள்ளது. எனினும், அந்த இடைக்கால ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ள சிலர் அண்மையில் நடைபெற்ற மாநில பார் கவுன்சில் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் என்பதால், BCI-யின் இந்த அறிவிப்பு வழக்கறிஞர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கேரளா உயர்நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு நேரடியாகப் பொருந்தாது. இருப்பினும், இரு மாநிலங்களிலும் BCI ஏற்படுத்தியுள்ள Limited Interim Arrangement தொடர்பாக எழுந்துள்ள சட்டப்பூர்வ கேள்விகளின் பின்னணியில், கேரள உயர்நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்ட நிலையில், புதிய மாநில பார் கவுன்சில் தனது முதல் கூட்டத்தை நடத்தி அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்கும் வரை, அத்தியாவசிய சட்டப்பூர்வ, நிதி மற்றும் நிர்வாக பணிகள் தடையின்றி நடைபெறுவதற்காக பார் கவுன்சில் ஆஃப் இந்தியா (BCI ) 31.07.2026 அன்று 9 பக்கங்களைக் கொண்ட விரிவான இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது .












கருத்துகள்