இந்திய விமானப்படையின் 29-வது தளபதியாக ஏர் மார்ஷல் ஆஷுதோஷ் தீட்சித் நியமனம்*
புதுடெல்லி: இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக (Chief of the Air Staff) ஏர் மார்ஷல் ஆஷுதோஷ் தீட்சித், PVSM, AVSM, VM, VSM அவர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.
தற்போது விமானப்படையின் துணைத் தளபதியாக பணியாற்றி வரும் இவர், வரும் *2026 அக்டோபர் 31-ம் தேதி பிற்பகல் முதல்*, 29-வது விமானப்படை தளபதியாக பொறுப்பேற்கிறார். தற்போதைய தளபதி ஏர் சீப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் அதே நாளில் ஓய்வு பெறுகிறார்.
*யார் இவர்?*
1966 டிசம்பர் 9-ல் பிறந்த ஆஷுதோஷ் தீட்சித், 1986 டிசம்பர் 6-ல் போர் விமான பிரிவில் இணைந்தார். தேசிய பாதுகாப்பு அகாடமி, பங்களாதேஷ் பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி, தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் மாணவர்.
Mirage-2000, MiG வகைகள், Jaguar, Tejas, Hawk உள்ளிட்ட போர் விமானங்களில் *3500 மணி நேரத்திற்கும் மேல்* பறந்த அனுபவம் கொண்டவர். ஆபரேஷன் சபேத் சாகர், ஆபரேஷன் ரக்ஷக், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட நடவடிக்கைகளில் பங்கேற்றவர்.
*விருதுகள்:* வாயு சேனா பதக்கம் (2006), விசிஷ்ட் சேவா பதக்கம் (2011), அதி விசிஷ்ட் சேவா பதக்கம் (2023), பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் (2026). ---


கருத்துகள்