வெற்றிப் பயணம் வழக்கு - முழு விவரம்
தமிழ்நாடு அரசின் திட்டமான *வெற்றிப் பயணம் (பெண்களுக்கு இலவச பஸ்)* திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் முழு விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
*வழக்கு எண்: WP 40328/2026 & WMP 45284/2026*
*மனுதாரர்:* N.கலாமணி, பவானி, ஈரோடு மாவட்டம் - தனியார் பேருந்து உரிமையாளர் (வழக்கறிஞர் M.பழனி)
*எதிர் மனுதாரர்கள்:* தமிழக அரசு மற்றும் 3 பேர்
*விசாரணை:*
- *நாள்:* அக்டோபர் 05, 2026 திங்கள் காலை 10.30 மணி
- *இடம்:* சென்னை உயர் நீதிமன்றம் - Court No.01 - தலைமை நீதிபதி அமர்வு
- *விசாரணை கட்டம்:* *FOR MAINTAINABILITY* - அதாவது இந்த வழக்கு விசாரணைக்கு தகுதியானதா என்பதை முதலில் முடிவு செய்யவுள்ளனர்.
*வழக்கின் சாராம்சம்:*
தனியார் பேருந்துகளில் பெண்கள் ஏற மாட்டார்கள், குடும்பத்துடன் அரசு பஸ்ஸில் இலவசமாக செல்வதால் ஆண் பயணிகளையும் இழக்கிறோம், தொழில் நஷ்டம், 15 தொழிலாளர்கள் பாதிப்பு என்று கலாமணி மனுவில் கூறியுள்ளார். வெற்றிப் பயணம் திட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என்று அறிவிக்க கோரியுள்ளார்.
*சட்ட ரீதியான நிலை என்ன?*
1. இந்த வழக்கு Maintainability-லேயே தள்ளுபடியாக அதிக வாய்ப்பு உள்ளது.
2. காரணம்: நலத்திட்டம் என்பது அரசின் கொள்கை முடிவு. கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது.
3. அரசியலமைப்பு சட்டம் 15(3) பெண்களுக்கு சிறப்பு சலுகை தர அரசுக்கு உரிமை வழங்குகிறது.
4. தனியார் பேருந்து நஷ்டத்தை காரணம் காட்டி 84 லட்சம் பெண்கள் பயன்பெறும் திட்டத்தை நிறுத்த முடியாது.
எனவே , *மகளிர் இலவச பயணத்திற்கு தடை கோரும் தனியார் மனு, அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தீர்ப்பாக வரும்* என்பதே பல மூத்த சட்ட வல்லுநர்களின் கருத்து.
தமிழ்நாடு அரசின் 'வெற்றிப் பயணம்' திட்டத்தை எதிர்த்து ஈரோடு தனியார் பேருந்து உரிமையாளர் கலாமணி தொடர்ந்த வழக்கு நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கின் சட்ட நிலை என்ன எனப் பார்த்தால்
*1. வழக்கு கேட்பதற்கு தகுதியானதா? (Locus Standi & Public Interest)*
மனுதாரர் தனது தொழில் பாதிப்பு என்று தனிப்பட்ட காரணத்தை கூறியுள்ளார். ஆனால் இது 84.32 லட்சம் பெண்கள் பயன்பெறும் பொது நலத் திட்டம். தனி நபர் வர்த்தக பாதிப்பை காரணம் காட்டி பொது நலத் திட்டத்தை ரத்து செய்ய முடியாது என்பது உச்சநீதிமன்ற தீர்ப்புகள்.
*2. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடுமா? (Policy Decision Doctrine)*
இது தான் மிக முக்கியமான சட்ட பாயிண்ட் சார்.
இந்திய அரசியலமைப்புப்படி, நலத்திட்டங்களை உருவாக்குவது அரசின் கொள்கை முடிவு (Policy Decision). கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பது நிலையான சட்டம். கொள்கை முடிவு மிக மோசமான, நியாயமற்ற முறையில் இருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிடும். வெற்றிப் பயணம் போன்ற மகளிர் மேம்பாட்டு திட்டம் அந்த வகையில் வராது.- *12,692 அரசு பஸ்களில்* இலவசம் (69 சதவீதம் பஸ்கள்)
- தினமும் *84.32 லட்சம் பெண்கள்* பயனடைகிற நிலையில்
- Express, LSS, Deluxe, Mofussil என அனைத்து சாதாரண பஸ்களிலும் இலவசம்
- CM *C.Joseph Vijay* அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார்
அரசு ஆண்டுக்கு ₹6000 கோடி செலவு செய்கிறது.
*3. அரசியலமைப்பு சட்டம் 15(3) பாதுகாப்பு:*
அரசியலமைப்பு பிரிவு 15(3) பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. இதன் அடிப்படையில் தான் மகளிர் இலவச பஸ் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே இதை பாகுபாடு என்று சொல்ல முடியாது.
*4. முந்தைய தீர்ப்புகள் என்ன சொல்கின்றன?*
- தமிழ்நாட்டின் மினி பஸ் திட்டத்திற்கு எதிராக தனியார் பஸ் உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது.
- கேரளாவில் 'பிரியதர்ஷினி' மகளிர் இலவச பஸ் திட்டத்திற்கு எதிரான வழக்கை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. "அரசுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்த உரிமை உண்டு" என்று தீர்ப்பு கூறியது.



கருத்துகள்