திமுக வழக்கறிஞர் பரந்தாமன் புகார் அரசியல் உள்நோக்கம் கொண்டது - துரை வைகோ MP பரபரப்பு அறிக்கை!*
*சென்னை, அக்டோபர் 06, 2026:* திமுக வழக்கறிஞர் பரந்தாமன் தன் மீதும், முதல்வர் விஜய், தலைவர் வைகோ, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருப்பதாக கூறியது தொடர்பாக மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ MP இன்று விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார்.
*அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது:*
மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடும் பரந்தாமன் தேர்தல் நடத்தை விதிகளை மீறி செய்தியாளர்களை சந்தித்துள்ளார். இதற்கு தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக எம்.எல்.ஏக்கள் இருவரை மதிமுக தலைமை அழைத்து பேசியதாக முழு பின்னணியையும் மறைத்து அவதூறு பரப்பியுள்ளார்.
மதிமுக 10 ஆண்டுகளாக திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உறுதியாக இருந்தது. மக்கள் மாற்றத்தை விரும்பியதால் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்து 108 எம்.எல்.ஏக்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
தேர்தல் முடிவுக்கு பின் விஜய் ஆட்சி அமைவதை தடுக்க திமுக பவர் சென்டர், பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க திமுக ஆதரவு தர முடிவு செய்ததாகவும், இதை மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் அம்பலப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
*உதயசூரியன் சின்னல் சர்ச்சை:*
தேர்தல் உடன்பாட்டில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் - மதுரை தெற்கு, கடையநல்லூர், மொடக்குறிச்சி ஆகியவை உதயசூரியன் சின்னத்திலும், சீர்காழி (தனி) தனி சின்னத்திலும் போட்டியிடுவது என மு.க.ஸ்டாலின், வைகோ கையெழுத்திட்டனர். ஆனால் வேட்புமனு தாக்கலுக்கு 2 நாள் முன்பு திமுக பவர் சென்டர் நிர்பந்தத்தால் சீர்காழியிலும் உதயசூரியனில் போட்டியிட வைத்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், வெற்றி பெற்ற 2 எம்.எல்.ஏக்களையும் அறிவாலயம் கவர்ந்து சென்றதாகவும், இது குறித்து நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருப்பவர்கள் நேர்மையான நிர்வாகம் நடத்தும் முதல்வர் விஜய் மீது புகார் கொடுப்பது கேலிக்குரியது என்றும் அவர் கூறியுள்ளார்.
---



கருத்துகள்