சர்தார் வல்பாய் பட்டேல் பிறந்தநாளில் தமிழகத்திற்கு பெருமை! சிறந்த புலன் விசாரணைக்கு தமிழகத்தை சேர்ந்த 2 ASP-க்களுக்கு மத்திய உள்துறை அமைச்சரின் தக்ஷதா விருது - யார் இந்த 2 சிங்கங்கள்?*
*சென்னை, அக்டோபர் .31:* இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான இன்று *தேசிய ஒற்றுமை தினம் (ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்)* கொண்டாடப்படும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் *கேந்திரிய கிருஹமந்திரி தக்ஷதா பதக் 2026* விருது பட்டியலை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 12 பக்கங்கள் கொண்ட இந்த பட்டியலில் நாடு முழுவதும் *490 பேருக்கு* விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்திற்கு *3 பேருக்கு* பெருமை கிடைத்துள்ளது.
தமிழகத்தின் 3 சாதனையாளர்கள்
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஆணைப்படி (Page 11), தமிழகத்தை சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்ட பிரிவுகள்:
*1. புலன் விசாரணை பிரிவில் (Investigation Field) - 2 பேர்*
> *69. Smt. Madhu Kumari, ASP - Tamil Nadu*
> *70. Shri V Satish Kumar, ASP - Tamil Nadu*
இந்த விருது சிக்கலான குற்ற வழக்குகளில் அறிவியல் பூர்வமாக புலன் விசாரணை செய்து, விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்று தந்ததற்காக வழங்கப்படுகிறது. தமிழக காவல்துறையின் புலன் விசாரணை திறன் தேசிய அளவில் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக DGP அலுவலகம் தெரிவித்துள்ளது.
*2. தடயவியல் பிரிவில் (Forensic Science Field) - 1 பேர்*
> *9. Dr. Rajshree Raghunath, Deputy Director - Tamil Nadu*
விருது பற்றி...
- இந்த விருது 4 பிரிவுகளில் வழங்கப்படுகிறது: (i) சிறப்பு அதிரடி நடவடிக்கை (Special Operation) - 358 பேர், (ii) புலன் விசாரணை (Investigation) - 123 பேர், (iii) தடயவியல் (Forensic) - 9 பேர், (iv) உளவுத்துறை (Intelligence) - பெயர் பட்டியல் ரகசியம்.
- ஒவ்வொரு ஆண்டும் சர்தார் படேல் பிறந்த தினமான அக்.31-ல் தான் இந்த விருது அறிவிக்கப்படும்.
- Special Operation பிரிவில் பஞ்சாப் (37 பேர்), CRPF (88 பேர்), ஜார்க்கண்ட் (28 பேர்) ஆகிய மிகப்பெரிய நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
விருது பெற்ற அனைத்து அதிகாரிகளின் சரியான பெயர் மற்றும் பதவியை இந்தி, ஆங்கிலத்தில் *20 நவம்பர் 2026-க்குள்* அனுப்புமாறு அனைத்து மாநில DGP-க்களுக்கும் மத்திய துணை செயலாளர் D K Ghosh உத்தரவிட்டுள்ளார்.
விருது வழங்கும் விழா டெல்லியில் விரைவில் நடைபெறும்.















கருத்துகள்