தமிழகத்தில் மீண்டும் அதிகாலை 6 மணி காட்சி - அரசாணை வெளியீடு*
தமிழ்நாட்டில் திரையரங்குகளில் புதிய தமிழ் திரைப்படங்களுக்கு தினசரி 6 காட்சிகள் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசிதழில் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை (சினிமா) துறை, *G.O. Ms. No.379, நாள் 3 நவம்பர் 2026*-ன் படி, தமிழ்நாடு சினிமா (ஒழுங்குமுறை) விதிகள் 1957-ல் திருத்தம் செய்துள்ளது. இந்த திருத்தம் 3 நவம்பர் 2026 முதலே அமலுக்கு வந்துள்ளது.
*அரசாணையில் என்ன உள்ளது?*
FORM C, Condition 14-A-வின் கீழ் உள்ள பழைய Proviso நீக்கப்பட்டு புதிய Proviso சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி:
> நிரந்தர மற்றும் அரை நிரந்தர திரையரங்குகளின் உரிமையாளர்கள், ஒரு புதிய தமிழ் திரைப்படம் வெளியான நாளிலிருந்து *ஒரு வாரத்திற்கு, தினசரி காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.30 மணி வரை 6 காட்சிகள் வரை* திரையிடலாம். இதே அனுமதி *உள்ளூர் பண்டிகை நாட்கள், சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களிலும்* பொருந்தும்.
படத்தின் நீளம் காரணமாக 6 காட்சிகளை திரையிட முடியாவிட்டால், கொடுக்கப்பட்ட நேரத்திற்குள், காட்சிகளுக்கு இடையே தேவையான இடைவெளி விட்டு, எத்தனை காட்சிகள் முடியுமோ அத்தனை காட்சிகளை மட்டும் திரையிட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவில் *A. கார்த்திக், அரசு முதன்மைச் செயலாளர்* கையெழுத்திட்டுள்ளார்.
*பின்னணி என்ன?*
2023 ஜனவரியில் அஜித் நடித்த 'துணிவு' பட வெளியீட்டின் போது ஏற்பட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, தமிழகத்தில் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டு, தினசரி 4 காட்சிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
பின்னர் தற்போதைய அரசு 5 காட்சிகளாக உயர்த்தியது. தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், Tamil Film Active Producers Association மற்றும் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகியோரின் தொடர் கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் *C. ஜோசப் விஜய்* இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.
*யாருக்கு பலன்?*
இந்த வாரம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி வெளியாக உள்ள சூர்யாவின் 'Scene' மற்றும் நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2 - மகாசக்தி' ஆகிய படங்களுக்கு இந்த உத்தரவு மூலம் நேரடி பலன் கிடைக்கும். இதற்காக Vels Film International நிறுவனம் முதலமைச்சருக்கும், அமைச்சர் ராஜ்மோகனுக்கும் நன்றி தெரிவித்துள்ளது.





கருத்துகள்