:*நஞ்சை நிலங்கள் மனைகளாக மாறுவதை தடுக்க தமிழக அரசு அதிரடி!*
*G.O.Ms.No.201 / 04.11.2026 - இனி 3 துறைகள் NOC இல்லாமல் நஞ்சை நிலம் மனையாகாது
தமிழகத்தில் புஞ்சை, நஞ்சை, மானாவாரி, தரிசு என வகைப்படுத்தப்பட்டுள்ள நிலங்களில், குறிப்பாக நஞ்சை நிலங்கள் வேகமாக மனைகளாக மாற்றப்படுவதை தடுக்க தமிழக அரசு புதிய அரசாணையை பிறப்பித்துள்ளது.
ஒரு காலத்தில் சம்பா, தாளடி, குருவை என முப்போகம் விளைந்த நஞ்சை நிலங்கள், இன்று ஒரு போகம் கூட விளைவிக்க முடியாமல் கைவிடப்பட்டு, மனையிட விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. இதனால் நெல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு, உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இதை கருத்தில் கொண்டு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை http://G.O.Ms.No.201-ஐ நேற்று (04.11.2026) பிறப்பித்துள்ளது. இது இன்று (05.11.2026) அரசிதழில் வெளியிடப்பட்டது.
*புதிய அரசாணையில் என்ன?*
1. *Rule 6 நீக்கம்:* இதுவரை இருந்த எளிமையான மாற்று முறை ரத்து.
2. *9 ஆவணங்கள் கட்டாயம்:* நஞ்சை நிலத்தை மாற்ற பத்திரம், பட்டா, சிட்டா, அடங்கல் (3 ஆண்டு), வடிகால் வரைபடம், 500 மீட்டர் சுற்றளவு வரைபடம், அரசு புறம்போக்கு சேர்க்கவில்லை என்ற உறுதிமொழி உள்ளிட்ட 9 ஆவணங்கள் Online Single Window Portal-ல் பதிவேற்ற வேண்டும்.
3. *3 NOC கட்டாயம்:*
- வருவாய் கோட்டாட்சியர் (RDO)
- வேளாண் இணை இயக்குனர்
- நீர்வளத்துறை செயற்பொறியாளர்
ஆகிய மூவரும் "இந்த நஞ்சை நிலம் இனி விவசாயத்திற்கு ஏற்றதல்ல, நீராதாரம் பாதிக்காது" என்று சான்று கொடுத்தால் மட்டுமே DTCP இயக்குனர் அனுமதி கொடுப்பார்.
*விவசாயிகள் வரவேற்பு:*
"புஞ்சை நிலத்தை விட நஞ்சை நிலம் தான் நாட்டின் உயிர். முப்போகம் விளைந்த இடத்தில் இன்று மனை போடுவது வேதனை. விவசாயம் தான் முக்கியம் என்று அரசு சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது" என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் நஞ்சை நிலங்கள் மனைகளாக மாற்றப்படுவது இனி முற்றிலும் கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது





கருத்துகள்