*CBI அதிரடி - ரயில்வே மூத்த பிரிவு பொறியாளர் லஞ்ச வழக்கில் கைது*
*தேதி: 06.11.2026 | இடம்: கட்னி, மத்தியப் பிரதேசம்*
மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கையின்படி,
மேற்கு மத்திய ரயில்வே, புதிய கட்னி சந்திப்பின் மூத்த பிரிவு பொறியாளர் (Senior Section Engineer) ஒருவர் 06.11.2026 அன்று லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
*வழக்கின் பின்னணி:*
CBI இந்த வழக்கை 05.11.2026 அன்று பதிவு செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பொறியாளர், புகார்தாரரிடம் இருந்து 30 தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,500 வீதம் மொத்தம் ரூ.45,000 லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு. தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்காமல் இருப்பதற்காக இந்த லஞ்சம் கேட்கப்பட்டுள்ளது.
*CBI நடவடிக்கை:*
புகாரை அடுத்து CBI வலைவிரித்து, கட்னியில் புகார்தாரரிடம் இருந்து ரூ.45,000 லஞ்சம் வாங்கும் போது பொறியாளரை கையும் களவுமாக பிடித்தது. அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
*நீதிமன்ற நடவடிக்கை:*
கைது செய்யப்பட்ட பொறியாளர் ஜபல்பூர் தகுதி பெற்ற நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நவம்பர் 12, 2026 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மூலம்: CBI அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கை, Dated 06.11.2026 |www.cbi.gov.in
*பப்ளிக் ஜஸ்டிஸ்- உண்மை, வெளிப்படைத்தன்மை, பொது நீதி*

.jpg)

கருத்துகள்