*தமிழக பாஜக மகளிரணி - அறிக்கை*
*லட்கி ஹூன் நாடகம், லாட்டரி வியாபாரம் - ராகுல் மௌனம் ஏன்?*
JNU-வில் 11 மாணவிகள் புகார், DU-வில் 17 வயது மாணவிகளை NRI-க்கு விலை பேசிய சம்பவம் - காங்கிரஸ் - NSUI-யின் பெண் பாதுகாப்பு முகமூடி கிழிந்தது! NIA விசாரணை கோரி ABVP போர்க்கொடி - தமிழக பாஜக மகளிரணி கடும் கண்டனம்.
டெல்லி பல்கலைக்கழக வளாகங்களில் அடுத்தடுத்து வெளியான இரண்டு அதிர்ச்சி சம்பவங்கள், ‘Ladki Hoon Lad Sakti Hoon’ என்று முழங்கும் காங்கிரஸின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
*சம்பவம் 1: JNU - காங்கிரஸ் MP பிமோல் அகோய்ஜம்*
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (JNU) சமூக அறிவியல் பள்ளி பேராசிரியரும், உள் மணிப்பூர் காங்கிரஸ் MP-யுமான டாக்டர் அங்கோம்சா பிமோல் அகோய்ஜம் மீது 11 மாணவிகள் பாலியல் புகார் கொடுத்தனர். JNU Internal Complaints Committee (ICC) விசாரித்து, குற்றச்சாட்டு உறுதியானதால் துணைவேந்தர் சாந்திஸ்ரீ பண்டிட் 09.10.2026 அன்று பணிநீக்கம் செய்தார்.
டெல்லி போலீசில் 11.10.2026 அன்று Vasant Kunj North காவல் நிலையத்தில் BNS பிரிவு 75-ன் கீழ் FIR பதிவு செய்யப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி அனூப் பாம்பானி 02.11.2026 அன்று இடைக்கால தடை (Interim Stay) மட்டும் வழங்கினார். இது விடுதலை தீர்ப்பு அல்ல, வழக்கு ஜனவரி 2027-க்கு ஒத்திவைப்பு.
இவ்வளவு புகார், FIR நிலுவையில் இருக்கும்போதே காங்கிரஸ் தலைமை அவருக்கு 2027 மணிப்பூர் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரக் குழு மற்றும் தேர்தல் அறிக்கை குழு இணைத் தலைவர் பொறுப்பை வழங்கியுள்ளது.
*சம்பவம் 2: DU ராமானுஜன் கல்லூரி - NSUI துணைத் தலைவர் அனஸ் கான்*
டெல்லி பல்கலைக்கழக ராமானுஜன் கல்லூரி NSUI துணைத் தலைவர் அனஸ் கான், 17-22 வயது மாணவிகளை WhatsApp குழுவில் சேர்த்து, நவம்பர் 21 அகமதாபாத் Diljit Dosanjh கச்சேரிக்கு NRI Clients-க்காக பெண்கள் தேவை என்றும், விமான டிக்கெட், VVIP Access, ரூ.10,000 முதல் ரூ.30,000 வரை பணம் தரப்படும் என்றும் பதிவிட்டுள்ளார்.
கல்லூரி Proctorial Committee விசாரித்து 06.11.2026 அன்று 01.02.2027 வரை அவரை Suspend செய்தது.
NSUI தேசிய ஊடக பொறுப்பாளர் “செப்.12 DUSU தேர்தலின் போது கட்சி விரோத செயலுக்காக ஏற்கனவே சஸ்பெண்ட்” என்று பின் தேதியிட்ட கடிதம் காட்டுகிறது. ஆனால் DUSU தலைவர் யாஷ் தபாஸ், “Profile-க்கு ஏற்ப ஒரு இரவுக்கு ரூ.10,000-30,000” என்று அனஸ் கான் கூறியதாகவும், இது Backdated கடிதம் என்றும், இதில் பெரிய நெட்வொர்க் இருக்கலாம் என்றும் கூறி NIA விசாரணை கோரியுள்ளார்.
ABVP தேசிய பொதுச்செயலாளர் டாக்டர் வீரேந்திர சிங் சோலங்கி, இது சாதாரண சம்பவம் அல்ல, மனித கடத்தல், NRI தொடர்பு இருப்பதால் NIA விசாரணை தேவை என்று கோரியுள்ளார்.
*தமிழக பாஜக மகளிரணி கேள்வி:*
1. 11 மாணவிகள் புகார், FIR உள்ளவருக்கு தேர்தல் பதவி கொடுப்பது தான் பெண் நீதியா?
2. 17 வயது மாணவிகளை ரூ.30,000-க்கு விலை பேசியவர் மீது NIA விசாரணைக்கு காங்கிரஸ் தயாரா?
3. ராகுல் காந்தி நேரடியாக பதில் சொல்வாரா?
பெண்களின் கண்ணியம் தேர்தல் வாசகம் அல்ல, கொள்கையாக இருக்க வேண்டும். காங்கிரஸின் இரட்டை வேடத்தை தமிழக பாஜக மகளிரணி வன்மையாகக் கண்டிக்கிறது.
கருத்துகள்