*உயர்நீதிமன்றத்தின் கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞராக திருமூர்த்தி நியமனம்!*
*1. அடிப்படை விவரம்*
பெயர்: R. திருமூர்த்தி பதிவு எண்: MS 2295/2009
- *பயிற்சி:* சென்னை உயர் நீதிமன்றம் - முதன்மை அமர்வு மற்றும் உச்ச நீதிமன்றம் வரை
- *முக்கிய பிரிவு:* குற்றவியல் வழக்குகள்
- *புதிய பொறுப்பு:* சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர்
- *அரசாணை:* G.O.(D) No.1633, 13.11.2026, BNSS Section 18(1)
இவர் வெறும் கோர்ட்டில் வாதாடும் வழக்கறிஞர் மட்டும் இல்லை. களத்தில் மக்களோடு நின்று, போராட்டத்தில் இருந்து கோர்ட்டு வரை கொண்டு வரும் வழக்கறிஞர்.
*2. அவரது நீதிமன்றப் பணி - 6 முக்கிய தளங்கள்*
_1. மனித உரிமை மீறல் வழக்குகள்_
சிலரால் பாதிக்கப்பட்ட சில ஜாதிய மக்களுக்காக தொடர்ந்து ஆஜரானவர். SC/ST புகார்களில் உடனடியாக FIR பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவு வாங்கியவர்.
_2. தூய்மைப் பணியாளர்கள் உரிமை வழக்குகள்_
தூய்மைப் பணியாளர்களின் வேலை பாதுகாப்பு, ஊதியம், உரிமை பிரச்சனைகளுக்காக வாதாடியவர்.
_3. ஜாதி மாறிய கலப்புக் காதல் திருமணத்திற்கு எதிரான வழக்குகள்_
சொந்த விருப்பத்தில் திருமணம் செய்தவர்கள் மீதான தாக்குதல், குடும்ப வன்முறை வழக்குகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக ஆஜரானவர்.
_4. மாணவர்கள் வழக்குகள்_
பாதிக்கப்பட்ட மாணவர்கள், போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களுக்காக ஜாமீன் மற்றும் வழக்கு ரத்து மனுக்களை நடத்தியவர்.
_5. தொழிற்சங்க உரிமை வழக்குகள்_
தொழிலாளர்கள், தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள், போராட்டத் தடை உத்தரவுகளுக்கு எதிராக வாதாடியவர்.
_6. போராட்ட உரிமை மற்றும் கொடிக்கம்ப வழக்குகள்_
மக்கள் போராட்டங்கள் மீதான தடைகளை உடைத்து அனுமதி பெற்றுக் கொடுத்தவர். ஆக்கிரமித்து கடடிய குடியிருப்புகளை இடிக்க வந்தபோது அந்த மக்களின் வாழ்வாதாரக் குடியிருப்புகளை காத்தவர்.
*3. அவரது அரசியல் நெருக்கம் எங்கே?*
அவர் எந்த ஒரு கட்சியின் அதிகாரப்பூர்வ உறுப்பினர் / பொறுப்பாளர் என்று அரசாணையிலோ, அதிகாரப்பூர்வ அறிவிப்பிலோ சொல்லப்படவில்லை.
அவர் _வழக்கறிஞர்_ என்ற அடையாளத்தில் தான் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் அவரது அரசியல் நெருக்கம்:
- CPM, CPI உள்ளிட்ட கம்யூனிஸ்ட் இயக்கங்கள்
- வி சி கட்சி
- திவிக உள்ளிட்ட திராவிட இயக்கங்கள்
- ஆதித்தமிழர் பேரவை போன்ற அமைப்புகள் ஆகும்
இந்த அமைப்புகளோடு ஆழமான பிணைப்பு உண்டு. அவர்களின் போராட்டங்களில் பங்கெடுத்தவர், அவர்களின் வழக்குகளை நடத்தியவர்.
அதனால் அவரை _இடதுசாரி கம்யூனிஸ்ட் மற்றும் பட்டியல் அட்டவணை ஜாதிகளுக்கு நெருக்கமான மக்கள் வழக்கறிஞர்_ என்று தான் பலரும் அழைக்கிறார்கள்.
*ஒரு குழப்பத்தை தெளிவுபடுத்துவோம்*
இப்போது அவரை நியமித்தது _தமிழக அரசு (தவெக ஆட்சி)_. அதனால் அவர் தவெக கட்சியை சேர்ந்தவர் என்று அர்த்தம் இல்லை.
அரசு வழக்கறிஞர் நியமனம் என்பது கட்சி உறுப்பினர் பதவி இல்லை. அரசு தரப்பில் நீதிமன்றத்தில் வாதாடும் சட்டப் பொறுப்பு.
*சுருக்கமாக:*
> கட்சி சார்பு - அதிகாரப்பூர்வமாக இல்லை
> அரசியல் நிலைப்பாடு - இடதுசாரி, முற்போக்கு, மனித உரிமை சார்பு, மக்கள் இயக்கங்களுக்கு நெருக்கமானவர்
*4. புதிய பொறுப்பில் என்ன மாறும்?*
இதுவரை மக்கள் பக்கம் நின்று வாதாடியவர், இனி அரசு தரப்பில் குற்றவியல் வழக்குகளை நடத்துவார்.
இதுவரை ஒரு சார்பு அடித்தளம் - சுமார் 30 சதவீதம் உள்ள ஒடுக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்களுக்காக வாதாடிய நிலையில், இனி மீதமுள்ள 70 சதவீதம் மக்களையும் சேர்த்து - அனைத்து மக்களுக்கும் நீதி கிடைக்க அரசு தரப்பில் வாதிட வேண்டிய பொறுப்பு அவருக்கு வந்துள்ளது.
இது சிறிய மாற்றம் இல்லை. ஒரு தரப்பின் வழக்கறிஞராக இருந்தவர், இனி நீதிக்காக நிற்கும் அரசின் வழக்கறிஞர்.


கருத்துகள்