வேப்பமரத்தடியில் தூங்கி... புல் வெட்டியது போல் நடித்து... அரசை ஏமாற்றிய Work Mate-களுக்கு சாவு மணி! - கமிஷனர் அதிரடி!
*வேப்பமரத்தடியில் தூங்கி... புல் வெட்டியது போல் நடித்து... அரசை ஏமாற்றிய Work Mate-களுக்கு சாவு மணி! - கமிஷனர் அமுதவல்லி அதிரடி!*
*தமிழக கிராமங்களில் 10 வருஷமா நடந்த மிகப்பெரிய ஏமாற்று நாடகம் அம்பலம்!*
திருநின்றவூர், திருவள்ளூர் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் 100 நாள் வேலை திட்டத்தில் ஒரே கூத்து தான்!
காலை 10 மணிக்கு வருவது, மஸ்டர் ரோலில் கையெழுத்து போடுவது, பிறகு *வேப்பமரத்தடியில் துண்டை விரித்து தூங்குவது, புல் வெட்டுவது போல் சிறிது நேரம் பாவ்லா காட்டுவது*, மதியத்திற்குள் வீட்டுக்கு போவது - ஆனால் கணக்கில் மட்டும் 100 பேர் முழு நேரம் வேலை செய்ததாக காட்டுவது!
இதற்கு பெயர் தான் Work Mate!
ஒரே ஆள் 8 வருஷம், 10 வருஷமா அதே ஊராட்சியில் Work Mate. கேட்டால் கிராம சபை தீர்மானமாம்! ஆனால் கிராம சபையே நடக்கவில்லை என்பது தான் உண்மை. அப்பாவி கூலி தொழிலாளர்களின் வியர்வையில் இவர்கள் குளிர் காய்ந்துள்ளனர்.
*இதுதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி!*
புகார்கள் குவிந்ததை அடுத்து களத்தில் இறங்கிய *ஊரக வளர்ச்சி கமிஷனர் திருமதி. அமுதவல்லி* அவர்கள்,
> *"போதும் இதுவரை ஏமாத்தியது! இனி இந்த டிராமா நடக்காது!"*
என்று கூறி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
*உத்தரவு என்ன?*
1. *வேப்பமரத்தடி Work Mate கூட்டம் காலி!* - பழைய Work Mate அனைவரும் உடனடியாக விடுவிப்பு.
2. 05.10.2026 முதல் ஒவ்வொரு ஊராட்சியிலும் ரொட்டேஷன் முறையில் புதிய Work Mate - கிராம சபை முன்னிலையில் தேர்வு.
3. புல் வெட்டுவது போல் நடிக்கும் வேலை இனி செல்லாது - கூடுதல் ஆட்சியரே நேரடியாக கள ஆய்வு செய்வார்.
4. இனியும் ஒரே ஆள் தொடர்ந்தால், சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை!
VB GRAM (G) திட்டத்தில் இனி ஏமாற்று வேலைக்கு இடமில்லை. உழைக்கும் மக்களுக்கு தான் உண்மையான நீதி கிடைக்கும்!



கருத்துகள்