முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு உதவி

வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு உதவி மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது: தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் புதுமை கண்டுபிடிப்பு மற்றும்  வேளாண் தொழில்முனைவு மேம்பாடு என்ற திட்டத்தை வேளாண் துறை அமைச்சகம் அமல்படுத்தி வருகிறது. இதன் மூலம் வேளாண் தொடக்க நிறுவனங்கள் உட்பட 799 தொடக்க நிறுவனங்களுக்கு  நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் அளிக்கப்படுகின்றன. அதோடு, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வேளாண் புதுமை கண்டுபிடிப்பு நிதி திட்டத்தின் கீழ் வேளாண் தொடக்க நிறுவனங்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உதவி வருகிறது.  இந்த நிதி கடந்த 2016-17ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதில் புத்தாக்க நிதி, பாதுகாப்பு நிதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு பிரிவு என்ற இரு அம்சங்கள்  உள்ளன. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் வேளாண் தொழில் பாதுகாப்பு அமைப்புகள் வேளாண் தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்கள் உட்பட இதர தொடக்க நிறுவனங்களுக்கும், தொழில்முனைவோருக்...

விவசாயிகளுக்கான பாதுகாப்பு உபகரணங்கள்

விவசாயிகளுக்கான பாதுகாப்பு உபகரணங்கள்  விவசாயிகளுக்கிடையே புதிய பல்வேறு ஒருங்கிணைந்த பூச்சிக்கொல்லி மருந்து மேலாண்மை தொழில்நுட்பம் தொடர்பாக  விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 35 மத்திய ஒருங்கிணைந்த பூச்சிக்கொல்லி மருந்து மேலாண்மை மையங்கள் செயல்படுகின்றன.  இதன் மூலம் விவசாயிகளுக்கான பண்ணைப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. விவசாய நிலங்களில் பூச்சிகளை எளிதில் கண்டறிவதற்கான உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.  அத்துடன் கையுறைகள், தொப்பி, கவசஉடை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களும் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கும் போது இந்த உபகரணங்களை பயன்படுத்துவது குறித்த செயல்முறையும் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது.   ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கப்பட வேண்டிய அளவு குறித்து விவசாயிகளுக்கு இதில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.  மக்களவையில் இது குறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த போது மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கூறினார்.

ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனையின் நடமாடும் மருத்துவ முகாம்

கேரளா மாநிலம் கூத்தாட்டுக்குளம் ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனையின் நடமாடும்  மருத்துவ முகாம்.       தமிழகத்தில் மதுரை, தேனி, ராமநாதபுரம், மற்றும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலும் நடக்க உள்ளது. இம்மருத்துவமனை கண் பரிசோதனை, சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்ட பேருந்தை வடிவமைத்துள்ளது. கூத்தாட்டுக்குளத்திற்கு செல்ல சிரமப்படும் கண் நோயாளிகளுக்காக இந்த நடமாடும் மருத்துவமனை தமிழகத்தில் பல பகுதிகளுக்கு மருத்துவம் பார்க்க வருகிறது. ஏப்ரல் மாதம். 2 ஆம் தேதியில் தேனி நகரில் கம்மவார் சங்கம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியிலும், ஏப்ரல். 3 ஆம் தேதியில் மதுரையில் மதுரைக் கல்லுாரி மைதானத்திலும், ஏப்ரல் மாதம் . 4 ஆம் தேதியிலும், இராமநாதபுரம் நகரில் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில், ஏப்ரல் .5 ஆம் தேதியிலும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரில் கண்ணதாசன் மணி மண்டபம் உள்ளிட்ட இடங்களில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கண் மருத்துவச்  சிகிச்சை முகாம் நடைபெறும். சிகிச்சை பெறுவதற்கு  முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு 0485- 225 3007ல் என...

காகிதம் விலை இரு மடங்கு உயர்வு காரணமாக பாதிப்புகளுக்கு உள்ளாகும் அச்சு இதழ்கள் மற்றும் செய்தி ஊடகங்கள்

காகிதம் விலை இரு மடங்கு உயர்வு; ஏப்ரல் .1 ஆம் தேதி முதல் கட்டணம் அதிகரிப்பு - காகிதம் விலை ஒரே ஆண்டில் இரு மடங்கு உயர்ந்துள்ள நிலையில் வேதிப் பொருட்கள் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வால் ஏப்ரல். 1 ஆம் தேதி முதல் 'ஆப்செட் பிரின்டிங்' பணிகளுக்கு 40 சதவீத கட்டணம் அதிகரிப்பு செய்யும் முடிவு அச்சகத்தில் தினசரி வார மற்றும் மாத இதழ்கள் பாதிப்புகளைச் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.. சேலம் மாவட்ட பேப்பர் (காகிதம்)  அலாய்டு விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் விஸ்வநாதன் தெரிவித்தாவது: வெளிநாட்டிலிருந்து பேப்பர் (காகிதம்) தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டதைக் காரணம் காட்டி பேப்பர் (காகிதம்) விலை 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில் . தமிழகத்தின் பிரசித்தி பெற்ற காகித ஆலைகளான டி.என்.பி.எல்., எனும் தமிழ் நாடு காகித ஆலை ,சேசஷாய், பலார்பூர் ஜெ.கே. வேஸ்ட் கோர்ட்ஸ், ஆந்திரா பேப்பர் ஆலை ஆகியவற்றுக்கு தேவையான மூலப்பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து வந்த நிலையில். அவைகள் தற்போது முற்றிலுமாக நின்று போனது.. காகித ஆலைகள் தங்களது தயாரிப்பு ப...

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் துறை மாற்றப்பட்டது.

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் துறை மாற்றப்பட்டது. ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர், போக்குவரத்துத் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்  தலைமையிலான அமைச்சரவையில் முதல் முறையாக  அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  ஆர்.எஸ்.இராஜ கண்ணப்பன் (எஸ். கண்ணப்பன் என்ற பெயர் அவர் மாற்றம் செய்த நிலையில்) தற்போதைய முதுகுளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் தொகுதியிலிருந்து 1991 ஆம் ஆண்டு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பொதுப்பணித்துறை, மின்சாரம், நெடுஞ்சாலை, மற்றும் கனிமவளத்துறை  அமைச்சராக காலம்சென்ற முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் அமைச்சரவையில் 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம்  ஆண்டு வரை உள்ள காலத்தில் இருந்தார். பின்னர் மக்கள் தமிழ் தேசம் என்ற தனிக்கட்சியை தன் சமூக ஆதரவாளர்களுடன் துவக்கினார்....

பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற சிவில் விருதுகள் வழங்கும் விழாவில், 2022-ம் ஆண்டுக்கான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று(28.03.2022) நடைபெற்ற சிவில் விருதுகள் வழங்கும் விழா-2-ல், 2022-ம் ஆண்டுக்கான பத்ம விபூஷன், பத்ம பூஷன் பத்ம பூஷன், பத்மஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் வழங்கினார். இன்று விருது பெற்றவர்களில், பத்ம விபூஷன் விருது டாக்டர். பிரபா ஆத்ரே, திரு கல்யாண் சிங் (மறைவுக்கு பிந்தைய)  ஆகியோரும், பத்ம பூஷன் விருது திரு விக்டர் பானர்ஜி, டாக்டர். சஞ்சயா ராஜாராம் (மறைவுக்கு பிந்தைய), டாக்டர். பிரதிபா ராய் மற்றும் ஆச்சாரியா வஷிட்ட திரிபாதி, மற்றும் டாக்டர். கிருஷ்ணமூர்த்தி எல்லா, திருமதி. சுசித்ர கிருஷ்ண எல்லா (இரட்டையர்) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். இந்த ஆண்டு 4 பேருக்கு பத்ம விபூஷன், 17 பேருக்கு பத்ம பூஷன், 107 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் உட்பட மொத்தம் 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இவர்களில் ஒரு பகுதியினருக்கு கடந்த 21-ம் தேதி நடைபெற்ற விழாவில் விரு...

தேசிய பாதுகாப்பு சேவை மற்றும் சைனிக் பள்ளிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம்: மத்திய இணையமைச்சர் தகவல்

தேசிய பாதுகாப்பு சேவை மற்றும் சைனிக் பள்ளிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம்: மத்திய இணையமைச்சர் தகவல் தேசிய பாதுகாப்பு அகாடமி நவம்பர் 2021 தேர்வை 116891 மகளிர் எழுதி உள்ளனர். ஜூலை 2022  தேர்வுக்கான பணிகள் நடந்து வருகின்றன. ராணுவ நர்சிங் அதிகாரிகள் 4734 பேர் உள்பட 10493 பெண் அதிகாரிகள் பாதுகாப்புத் துறையில் சேவையாற்றி வருகின்றனர். ஆட்சேர்ப்பு என்பது மனித வள தேவைகள் மற்றும் பாதுகாப்புப் படைகளில் பங்கினை பூர்த்தி செய்வதை பொறுத்தது. 2021 – 2022 கல்வியாண்டு முதல் அனைத்து 33 சைனிக் பள்ளிகளிலும் பெண் குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். மிசோரமில் உள்ள சிங்சிப் சைனிக் பள்ளியில் கடந்த 2018 -19ஆம் கல்வியாண்டில் சைனிக் பள்ளி சங்கத்தால் அறிவிக்கப்பட்ட கொள்கை படி முதன்முதலாக பெண் குழந்தைகள் சோதனை முறையில் அனுமதிக்கப்பட்டனர். இதன் பிறகு அனைத்து சைனிக் பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பில் உள்ள காலியிடத்தில் 10 % அல்லது 10 பெண் குழந்தைகள் இதில் எது அதிகமாக உள்ளதோ அதன்படி பெண் குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். 2021 -2022 ஆம் கல்வியாண்டில் 33 பள்ளிகளில் 6 ஆம் வகுப்பில் 320 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ள...