முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இந்திய பொட்டாஷ் நிறுவனங்கள் கனடாவின் கான்போடெக்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

உலக அளவில் பொட்டாஷ் விநியோகத்தில் மிகப்பெரிய நிறுவனமான கனடாவின் கான்போடெக்சுடன இந்திய உர நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன வேளாண் சமூகத்துக்கு நீண்ட காலத்திற்கு உரம் கிடைப்பதை உறுதி செய்யும் நடவடிக்கையாக இந்தியாவின் உர நிறுவனங்களான கோரமண்டல் இன்டர்நேஷனல், சம்பல் உரங்கள் மற்றும் இந்திய பொட்டாஷ் நிறுவனங்கள் கனடாவின் கான்போடெக்ஸ் நிறுவனத்துடன், செப்டம்பர் 27,2022 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம், மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவிடம் இன்று வழங்கப்பட்டது.  உலக அளவில் பொட்டாஷ் விநியோகத்தில் மிகப்பெரிய நிறுவனமான கனடாவின் கான்போடெக்ஸ் ஆண்டுக்கு 130 லட்சம் மெட்ரிக் டன் அளவில்  உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகிறது.   இதுகுறித்து தெரிவித்த டாக்டர் மன்சுக் மாண்டவியா, விநியோகம் மற்றும் விலையில் உள்ள நிலையற்ற தன்மையை இந்த ஒப்பந்தம், குறைக்கும் என்றும்,  நீண்ட காலத்திற்கு பொட்டாஷ் உரம் இந்தியாவிற்கு கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்திய உர நிறுவனங்களுக்கு ...

தனது தெய்வீகக் குரலால் உலகம் முழுவதையும் சகோதரி லதா வென்றார் பிரதமர் பெருமிதம்

அயோத்தியில் லதா மங்கேஷ்கர் சதுக்கத்தை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பிரதமர் உரையாற்றினார் “தனது தெய்வீகக் குரலால் உலகம் முழுவதையும் சகோதரி லதா வென்றார்” "அயோத்தியின் பிரமாண்ட கோவிலுக்கு பகவான் ஸ்ரீராமர் வருகை தரவுள்ளார்" "ராமரின் ஆசீர்வாதத்துடன் கோவிலின் கட்டுமானப் பணிகள் வேகமாக நடப்பதைக் கண்டு நாடு பரவசம் அடைந்துள்ளது" "இது 'பாரம்பரியத்தில் பெருமை' என்பதன் வலியுறுத்தலோ, நாட்டின் வளர்ச்சியின் புதிய அத்தியாயமு் ஆகும்" "பகவான் ராமர் நமது நாகரிகத்தின் அடையாளமாகவும் மற்றும் நமது ஒழுக்கம், பண்பாடு, கண்ணியம், கடமை ஆகியவற்றில் வாழும் சித்தாந்தமாகவும் உள்ளார்" "சகோதரி லதாவின் கீர்த்தனைகள் மூலம் நமது மனம் பகவான் ராமரில் மூழ்கியது " "சகோதரி லதா பாடிய மந்திரங்கள் அவரது குரலை மட்டும் எதிரொலிக்காமல், அவரது நம்பிக்கை, ஆன்மீகம் மற்றும் தூய்மையையும் எதிரொலித்தது" " சகோதரி லதாவின் குரல் இந்த நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் நீண்ட காலத்திற்கு இணைக்கும்" அயோத்தியில் லதா மங்கேஷ்கர்  சதுக்கத்தை அர்ப்பணிக்கும்  நிகழ...

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமனம்.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமனம். தற்போது மத்திய அரசின் அட்டானி ஜெனரல் எனப்படும், அரசு தலைமை வழக்கறிஞராக இருக்கும் கே.கே.வேணுகோபால் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ளதையடுத்து மத்திய அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக, மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமனம் செய்யப்பட்டார். இவ் உத்தரவை குடியரசுத் தலைவர் பிறப்பித்துள்ளார். மேலும் பதவி ஏற்கும் நாளிலிருந்து மூன்று ஆண்டுகள், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக பணியில் இருப்பாரென அறிவிக்கப்பட்டுள்ளது.  1950 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி பாண்டிச்சேரியில் பிறந்த வெங்கடரமணி, உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராகவும், இந்திய சட்ட ஆணையத்தின் உறுப்பினராகவும் உள்ளவர் மூன்று தலைமுறைக்கும் மேலாக உச்ச நீதிமன்றத்தில் பயிற்சி செய்கிறார். அவர் மத்திய அரசு, மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் சார்பில் பல வழக்குகளில் பங்கேற்றுள்ளார். வெங்கடரமணி தமிழ்நாடு பார் கவுன்சிலில் ஜூலை மாதம் 1977  ஆம் ஆண்டில் பதிவு செய்து பயிற்சியைத் தொடங்கி. 1979 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத...

கோவில் பூசாரியிடம் தட்டுக்காணிக்கையை வாரம் தோறும் ரூபாய். 21000 லஞ்சமாக கேட்டுப் பெற்ற உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் கைது

கோவில் பூசாரியிடம்  வாரம்தோறும் ரூபாய். 21000 லஞ்சமாக கேட்ட நாமக்கல் இந்து சமய அறநிலையத்துறை யின் உதவி ஆணையாளர் ரமேஷ் மற்றும் நைனாமலை கோவில் செயல் அலுவலர் லட்சுமி காந்தன் ஆகியோர் கைது. லஞ்சப் பணம் ரூபாய் 21,000 வாங்கும் போது ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவர்கள் இருவரையும் மறைந்திருந்து கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், முத்துகாப்பட்டி அருகில் பிரபலமான பெரியசாமி கோவில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். ஞாயிற்றுக்கிழமை தோறும் திரளான பக்தர்கள் ஆடு, கோழி பலி கொடுத்து பூஜை செய்வது வழக்கம். இந்த கோவில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த முத்துகாப்பட்டி பெரியசாமி கோவில்  சித்திரை திருவிழாவின் மூன்றாம் வெள்ளியன்று  சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதில் சுற்றுவட்டார கிராமங்களை ச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்கின்றனர். புகழ் பெற்ற கொல்லி மலையின் அடிவாரத்தில் உள்ள கோவில் முத்துகாபட்டி பெரிய சுவாமி கோவில். இந்த பகுதியின் புகழ் பெற்ற கோவிலாக விள...

திராவிட முன்னேற்றக் கழகத்தில் நடந்த தேர்தலில் போட்டியில்லாமல் தேர்வான மாவட்டச் செயலாளர்கள்

தமிழகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15 வது உட்கட்சித் தேர்தல் பல்வேறு கட்டங்களாக ஜனநாயக முறையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், 3 துணைச்செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி துவங்கி 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று முடிந்து. அக் கட்சியின் சார்பில் நிர்வாக வசதிக்காகப் பிரிக்கப்பட்டுள்ள 72  மாவட்டங்களுக்கும் வேட்பு மனுக்கள் பெறப்பட்ட நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் மாவட்டச் செயலாளர் தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது என்ற நிலையில்  திமுக சார்பில் 15வது பொதுத்தேர்தல் தொடர்பான பட்டியல் வெளியானது. அதன்படி திமுகவின் பேரூர், ஒன்றிய, நகர, பகுதி, மாநகர மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, மாவட்ட நிர்வாகிகளின் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ளார். அதன்படி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை முடிந்த...