தேசிய போர் நினைவுச்சின்னதின் 4வது ஆண்டு விழாவில் மாவீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி தேசிய போர் நினைவுச்சின்னம் இன்று நான்காவது ஆண்டைக் கொண்டாடுகிறது. இந்நாளைக் குறிக்கும் வகையில், முப்படைத் தலைமை தளபதி ஏர் மார்ஷல் பி.ஆர். கிருஷ்ணா, துணை ராணுவத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் எம்.வி.சுசீந்திர குமார், கடற்படை துணைத் தலைவர் வைஸ் அட்மிரல் கிரண் தேஷ்முக் , விமானப் படையின் துணைத் தலைவர் ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி ஆகியோர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர். சுதந்திரம் அடைந்ததில் இருந்து, துணிச்சலான வீரர்களின் தியாகங்களுக்குச் சான்றாக விளங்கும் இந்த நினைவிடம், பிப்ரவரி 25, 2019 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தேசபக்தி, தைரியம், தியாகம் மற்றும் கடமையில் அர்ப்பணிப்பு உணர்வை வளர்க்கும் நோக்கத்துடன் அதிகபட்ச மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு இந்த முயற்சிகள் ஊக்கமளிக்கும் வரவேற்பை பெற்றுள்ளது. மறைந்த மாவீரர்களுக்கு மக்கள் டிஜிட்டல் அஞ்சலி செலுத்துவதற்காக நினைவிடத்திற்கு அருகில் திரைகள் நிறுவப்பட்டுள்ளது....
RNI:TNTAM/2013/50347