முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

"9 ஆண்டுகள் சேவா, சுஷாசன், கரிப் கல்யாண்" என்ற விஞ்ஞான் பவனில் தேசிய மாநாடு

இந்தியா: முன்னேற்றப் பாதையில்’ என்ற கருப்பொருளில் மத்திய அரசின் 9 ஆண்டுகால சாட்சிகளின் விரிவான குழு விவாதம் குறித்த தேசிய மாநாடு மத்திய அரசு ஆட்சிப்பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தால் "9 ஆண்டுகள் சேவா, சுஷாசன், கரிப் கல்யாண்" என்ற கருப்பொருளுடன் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேசிய மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் திரு.நரேந்திர மோடியின்  தலைமையின் கீழ் செய்யப்பட்ட பல்வேறு சாதனைகள் மற்றும் தேசத்தின் முன்னேற்றத்திற்காக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து மூன்று அமர்வுகள் நடத்தப்பட்டன. முதல் அமர்வு ‘இந்தியா: முன்னேற்றப் பாதையில்’ என்ற தலைப்பில் நடைபெற்றது. பிரதமர் திரு. நரேந்திர மோடியின் திறமையான தலைமையின் கீழ் இந்தியா எவ்வாறு சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக மாறியுள்ளது என்பது குறித்து இந்த அமர்வு தெளிவுபடுத்தியது. இந்த அமர்வில் பிரபல பத்திரிகையாளர் திரு.நிதின் கோகலே நடுவராக இருந்தார். பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிறுவனர் திருமதி சுனில் பார்தி மிட்டல், அப்போ...

கான்பூர் விமான நிலையத்தின் விமானப்படை தளத்தில் சிவில் விமானப் போக்குவரத்து

கான்பூர் விமான நிலையத்தின் விமானப்படை தளத்தில் சிவில் விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டிருப்பதற்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார் கான்பூர் விமான நிலையத்தின் விமானப்படை தளத்தில்  சிவில் விமானப் போக்குவரத்து என்பது பயணத்தை எளிதாக்கும், வாய்ப்புகளை விரிவுபடுத்தும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ட்விட்டர் செய்திக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது: " வாழ்த்துகள் பல! கான்பூர் விமான நிலையத்தில் இத்தகைய வசதிகள் விரிவாக்கம் மக்களுக்கு விமானப் பயணத்தை மிகவும் வசதியானதாக மாற்றுவதோடு, பல புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும்

நைஜீரிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாதுகாப்பு அமைச்சர்

நைஜீரிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு போலா அகமது டினுபுவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், 2023, மே 28 முதல் 30 வரை நைஜீரியா செல்லவிருக்கிறார் மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் அதிபராகத்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  திரு போலா அகமது டினுபுவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், 2023, மே 28 முதல் 30 வரை நைஜீரியா செல்லவிருக்கிறார். அபுஜாவில் உள்ள ஈகிள் சதுக்கத்தில் மே 29 அன்று நடைபெறும் பதவியேற்பு விழாவில் ராஜ்நாத் சிங் கலந்து கொள்வார். பதவி விலகும் நைஜீரிய அதிபர் திரு முஹம்மது புஹாரி மே 28 அன்று வழங்கும் வரவேற்பின் போது அவரை, திரு ராஜ்நாத் சிங் சந்திப்பார். இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் நைஜீரியாவுக்குப் பயணம் செய்வது இதுவே முதன்முறையாகும். பாதுகாப்பு அமைச்சரின் பயணம், இரு நாடுகளுக்கிடையே வலுவான நட்புறவைக் கட்டமைப்பதில் முக்கியத்துவம்  வாய்ந்ததாக இருக்கும். இந்தியா- நைஜீரியா இடையே வளர்ந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பைக் கருத்தில்கொண்டு, பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் முக்கியமான பா...

சென்னை விமானநிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்த.வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள்

ரூ. 3 .37 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம்  25.05.2023 அன்று  சிங்கப்பூர் செல்லவிருந்த ஆண் பயணி ஒருவரை இடைமறித்து விசாரித்தபோது அவர் ஆடைகளுக்குள் ஒவ்வொன்றும் 100 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள 52  நோட்டுகளை  மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  மேலும் அவரது பகளை சோதித்தபோது ஒவ்வொன்றும் 100 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள 2783 பணநோட்டுகளும், ஒவ்வொன்றும் 500 சவுதி அரேபியன் ரியால் மதிப்புள்ள 1000 பணநோட்டுகளும் 19 சிறுசிறு பைகளில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் அந்நியச்செலாவணி மதிப்பு ரூ. 3.37 கோடியாகும் என சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.

பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வு பழங்காலத் தமிழரின் வரலாற்றுச் சுவடு

பொற்பனைக்கோட்டை தமிழ்நாட்டின்  சங்க காலத் ஸ்தளங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், பெரிய கோட்டை மற்றும் குடியிருப்புகளைக் கொண்ட முக்கியமான ஸ்தலமிது, இப்போது  நடத்தும் கண்டுபிடிப்புகள் இப்பகுதியின் வரலாற்றுக் கலாச்சாரப் பன்பாட்டின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் நிகழ்வாகும், நாம் நேரில் சென்ற போது "அகழாய்வு அறிவியல் முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, மேலும் தோண்டுவதற்குச் சிறந்த இடம் என்பது அரண்மனை இருந்தற்கான மத்தியப் பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது தொல்லியல் துறையின் கூற்றுப்படி, இந்தக் கோட்டையானது 17.75 ஹெக்டேர் நிலப் பரப்பளவில் மூன்று நுழைவு வாயில்களுடன் பரவியிருந்ததாக முன் நடந்த ஸ்தல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வடக்குப் பக்க நுழைவாயிலின் இருபுறமும் செங்கல் கற்களால்  சுவர்கள் உள்ளன. 1.26 ஹெக்டேர் நிலப் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இரும்புக் காலத்திலிருந்து தொடர்ச்சியான குடியிருப்புகளைக் கொண்ட ஒரு குடியிருப்பு மேடு கோட்டைக்குள் இருந்ததாக இப்போதும் நம்பப்படுகிறது. சங்ககாலத்திற்கு முறபட்ட மக்கள் வாழ்வியலில் சம்பந்தப்பட்ட  புதைகுழிகள், கருப்ப...

பிரதமரின் தேசிய பாலபுரஸ்கார் விருது 2023-க்கான விண்ணப்பங்களை அமைச்சகம் வரவேற்கிறது

பிரதமரின் தேசிய பாலபுரஸ்கார் விருது 2023-க்கான விண்ணப்பங்களை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வரவேற்கிறது சிறார்களின் தலைசிறந்த திறன்களை அங்கீகரிக்கும் விதமாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் கவுரவம் மிக்க  பிரதமரின் தேசிய பாலபுரஸ்கார் விருதுகளை வழங்குகிறது. தீரச்செயல், விளையாட்டுக்கள், சமூக சேவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், கலை மற்றும் கலாச்சாரம், புதிய கண்டுபிடிப்பு ஆகிய துறைகளில் மிகச்சிறந்த சாதனை படைத்தவர்களை தேசிய அளவில் அங்கீகரிப்பதற்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் புதுதில்லியில் இதற்கென நடைபெறும் சிறப்பு விழாவில் மாண்புமிகு குடியரசுத்தலைவர் இந்த விருதுகளை வழங்குவார். ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு, பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டதாக இந்த விருது இருக்கும். இந்தியாவில் வசிக்கும் இந்தியக் குடிமகனாக இருக்கும் (விண்ணப்பங்கள் அல்லது பரிந்துரை பெறும் கடைசி தேதி நிலவரப்படி) 18 வயதுக்கு மிகாத சிறார் எவரும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்காகவே வடிவமைக்கப்பட்ட https://awards.go...