முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

காவலுக்குச் சென்ற வயது முதியவரை காப்புக்காட்டில் வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழப்பு

காவலுக்குச் சென்ற வயது முதியவரை வனத்துறையினர் துப்பாக்கியால்    சுட்டதில் உயிரிழப்பு  தேனி மாவட்டம் குள்ளப்பக் கவுண்டன்பட்டியில், வனத்துறையினர் சுட்டதில் ஒருவர் உயிரிழப்பு.      இரவில் வயல் காவலுக்குச் சென்ற ஈஸ்வரன் என்ற வயது முதியவரை வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழப்பு நடந்ததாகத் தகவல். அனுமதியின்றி காப்புக்காடு வனப்பகுதிக்குள் வந்ததாகக் கூறி வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதாகத் தகவல். உயிரிழந்தவரின் உறவினர்கள் கம்பம் அரசினர் மருத்துவமனை அருகில் குவிந்தனர். தேனி மாவட்டம் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாகக்  வனத்துறையினர்  நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குள்ளப்பா கவுண்டன்பட்டியை  ஈஸ்வரன் என்ற முதியவர் உயிரிழந்ததாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.காப்புக்காட்டில் அத்துமீறி நுழைந்த நிலையில் வனத்துறையினர் பிடிக்க முயன்ற போது ஈஸ்வரன் பதிலுக்குத் தாக்கியதாக வனத்துறை தகவல் கூறுகிறது. கத்தியால் தாக்க வந்த ஈஸ்வரனை தங்கள் பாதுகாப்புக் கருதி வனவர் திருமுகன் துப்பாக்கியால் சுட்டதில் பலியானதாக வனத்துறை தரப்பில் ...

களமசேரியில் உள்ள ஜம்ரா சர்வதேச மையத்தில் இன்று காலை குண்டு வெடிப்பு

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமசேரியில் உள்ள ஜம்ரா சர்வதேச மையத்தில் இன்று  காலை நடந்த கிறிஸ்துவ மத ஜெபக் கூட்டத்தில்  குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு.  ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.  அடுத்தடுத்து குண்டு வெடித்ததால் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமசேரி டிபன் பாக்ஸ் குண்டுவெடிப்பு.. ஒருவர் உயிரிழப்பு.. 36 பேர் காயம்  காலை 9.40 மணியளவில் முதல் குண்டுவெடிப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு தொடர்ச்சியாக அடுத்தடுத்து குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குண்டு வெடிப்பு நடந்த போது அங்கிருந்த நபர் ஒருவர் கூறுகையில், "பிரார்த்தனைக் கூடாரத்தின் மையப் பகுதியில் தான் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. மொத்தம் மூன்று முறை வெடிச்சத்தம் கேட்டது. மண்டபத்தின் நடுவில் திடீரென நிறையப் புகை எழுந்தது. இந்த குண்டு வெடிப்பு பெண் ஒருவர் உயிரிழந்ததுள்ளார்" என்றும் தெரிவித்தார். குண்டுவெடிப்பைத் தொடர்ந்து  பிரார்த்தனைக் கூடாரத்தில் பல இடங்களில் தீ பரவியுள்ளது....

ஏழாவது இந்திய மொபைல் மாநாடு 2023

 7-வது இந்திய மொபைல் மாநாடு 2023-ஐ பிரதமர் அக்டோபர் 27-ம் தேதி தொடங்கி வைக்கிறார் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 100 '5 ஜி பயன்பாட்டு ஆய்வகங்களை’ பிரதமர் வழங்குகிறார் 100 ‘5ஜி ஆய்வகங்கள் முன்முயற்சி’ சமூகபொருளாதாரத் துறைகளில் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க 5 ஜி பயன்பாடுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, நாட்டில் 6 ஜி- சுற்றுச்சூழல் அமைப்பைக் கட்டமைப்பதற்கான ஒரு முக்கிய படியாகும். இந்திய மொபைல் மாநாடு 2023 முக்கிய அதிநவீன தொழில்நுட்பங்களின் மேம்பாட்டாளர், உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது புதுதில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் 2023, அக்டோபர் 27 அன்று காலை 9:45 மணிக்கு 7 வது இந்திய மொபைல் மாநாடு 2023-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 100 '5ஜி பயன்பாட்டு ஆய்வகங்களை பிரதமர் வழங்குகிறார். 100 '5 ஜி ஆய்வகங்கள்' முன்முயற்சியின் கீழ் இந்த ஆய்வகங்கள் உருவாக்கப்படுகின்றன. 100 ‘5 ஜி ஆய்வகங்கள் முன்முயற்சி', இந்திய...

ஐரோப்பிய ஒன்றியமும், இந்தியாவும் முதலாவது கூட்டுக் கடற்படைப் பயிற்சி

கினி வளைகுடா: ஐரோப்பிய ஒன்றியமும், இந்தியாவும் முதலாவது கூட்டுக் கடற்படைப் பயிற்சியில் ஈடுபட்டன இந்தியா, ஐரோப்பிய ஒன்றியத்தின் கப்பல்கள் கினியா வளைகுடாவில் கூட்டுக் கடற்படைப் பயிற்சியில் ஈடுபட்டன. இந்தப் பிராந்தியத்தில் கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் இது மேற்கொள்ளப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியமும், இந்தியாவும், கினியா வளைகுடாவில் அக்டோபர் 24 அன்று, தங்கள் முதலாவதுக் கூட்டு கடற்படை பயிற்சியை நடத்தின. பிரஸ்ஸல்ஸில் 2023 அக்டோபர் 5 அன்று ஐரோப்பிய ஒன்றியம் - இந்தியா கடல்சார் பாதுகாப்பு உரையாடலின் மூன்றாவது கூட்டத்தைத் தொடர்ந்து இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. பயிற்சியின் போது, இந்திய கடற்படையின் கடலோர ரோந்து கப்பல் ஐ.என்.எஸ் சுமேதா, கினியா வளைகுடாவில் மூன்று ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் கப்பல்களுடன் இணைந்தது: இத்தாலிய கடற்படை கப்பல் ஐ.டி.எஸ் ஃபோஸ்காரி, பிரெஞ்சு கடற்படை கப்பல் எஃப்.எஸ் வென்டோஸ், ஸ்பானிஷ் கடற்படை கப்பல் டோர்னாடோ ஆகிய  நான்கு கப்பல்களும் கானா கடற்கரையில் உள்ள சர்வதேச கடற்பரப்பில் தொடர்ச்சியான பயிற்சியை மேற்கொண்டன. இதில் கப்பலில்  ஏறும் பயிற்ச...

தற்சார்பு இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை புதியவகை எரிபொருட்கள் அறிமுகம்

புதியவகை எரிபொருட்களை அறிமுகப்படுத்துவது தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையை ஊக்குவிக்கிறது: பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் எஸ் பூரி "இந்தியன் ஆயிலின் பாரதீப் மற்றும் பானிபட் சுத்திகரிப்பு நிலையங்கள், இந்தியன் ஆயிலின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் உள்ள அறிவுசார் திறமையைப் பயன்படுத்தி, புதிய எரிபொருட்களை அறிமுகப்படுத்தியிருப்பது ஒரு எழுச்சிமிகு சாதனையாகும்" என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார். இந்தியாவிலேயே முதன்முறையாக இந்தியன் ஆயில் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் புதியவகை கேஸோலின் மற்றும் டீசல் எரிபொருட்களை' அறிமுகப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளர் பங்கஜ் ஜெயின், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.வைத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு ஹர்தீப் சிங் பூரி , இந்த நடவடிக்கை நமது உள்நாட்டுத் தொழில்நுட்பத் திறனைப் பறைசாற்றுகிறது, இது...

பத்திரப் பதிவுத்துறைக்கு கூடுதல் அதிகாரமளிக்கும் சட்டத் திருத்த மசோதா குடியரசுத்தலைவர் ஒப்புதல்

குடியரசுத் தலைவர் ஒப்புதலைபஹ பெற்ற பத்திரப் பதிவுத்துறைக்கு கூடுதல் அதிகாரமளிக்கும் சட்டத் திருத்த மசோதா: போலியான பத்திரப்பதிவு செய்தால் மூன்றாண்டுகள் வரை  சிறைத் தண்டனை ; உரிய ஆதாரங்களுடன் புகார் செய்தால் 30 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும்   ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார் பதிவுத்துறைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல்  தமிழ்நாட்டில் மட்டும் 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரங்கள் பதிவு செய்யப்படுகிறது. அவ்வாறு பதிவு செய்யப்படும் போது, ஒரு சில சார்பதிவாளர்கள் பதிவுப் பணியின் போது, மூலப்பத்திரங்களைக் கேட்டு அதாவது பி ஆர் ஆவணம் உள்ளதா என ஆய்வு செய்வதில்லை. அதே போன்று அந்த சொத்துக்கான வில்லங்கமும் சரி பார்க்காமல், பத்திரப்பதிவு செய்கின்றனர். அதைப் பயன்படுத்தி சில சமூக விரோதிகள்  போலியான ஆவணங்களை தயாரித்து பத்திரப்பதிவு செய்வதால் அது மோசடியாகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நிலத்தின்  உரிமையாளர்கள் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக வேண்டிய சூழ்நிலை வருகிறது.ஏற்கனவே, இது போன்ற வழக்குகள் ஏராளமானவை நீ...

விஜயதசமி விழாவில் பிரதமர் உரை

 டெல்லி துவாரகாவில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் பிரதமர் உரை "இது தீர்மானங்களை புதுப்பிக்கும் நாள்" "இந்தியாவில் ஆயுதங்கள் அபகரிப்புக்காகப் பயன்படுத்தப்படுவதில்லை, மாறாக தற்காப்புக்காகப் பயன்படுத்தப்படுகின்றன" "ராமரின் 'மர்யதா' (எல்லைகள்) மற்றும் எங்கள் எல்லைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும். "ராமர் பிறந்த இடத்தில் கட்டப்படும் கோயில் பல நூற்றாண்டு காத்திருப்புக்குப் பிறகு இந்தியர்களாகிய எங்கள் பொறுமைக்கு கிடைத்த வெற்றியின் சின்னமாகும்" என்று தெரிவித்துள்ளார். "ராமரின் சிந்தனைகள் அடங்கிய இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும்" இந்தியா இன்று உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், மிகவும் நம்பகமான ஜனநாயக நாடாகவும் உருவெடுத்து வருகிறது. "சமூகத்தில் உள்ள தீமைகள் மற்றும் பாகுபாடுகளை முடிவுக்குக் கொண்டுவர நாம் உறுதியேற்க வேண்டும்" பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று டெல்லியில் உள்ள துவாரகாவில் ராம் லீலாவில் பங்கேற்றார்.விஜய தசமியையொட்டி அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து விஜய தசமி திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திர...