முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

127 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்ப வந்த புனித பிப்ரவா நினைவுச்சின்னங்கள்

127 ஆண்டுகளுக்குப் பிறகு புனித பிப்ரவா நினைவுச்சின்னங்கள் திரும்பக் கொண்டுவரப்பட்டதை பிரதமர் வரவேற்றார். 127 ஆண்டுகளுக்குப் பிறகு பகவான் புத்தரின் புனித பிப்ரஹ்வா நினைவுச்சின்னங்கள் இந்தியாவுக்குத் திரும்பியதைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பாராட்டினார். நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்திற்கு இது ஒரு பெருமை மற்றும் மகிழ்ச்சியான தருணம் என்று அவர் கூறினார். விகாஸ் பீ விராசத் பீயின் உணர்வைப் பிரதிபலிக்கும் ஒரு அறிக்கையில், பகவான் புத்தரின் போதனைகள் மீது இந்தியா கொண்டிருக்கும் ஆழ்ந்த மரியாதையையும், அதன் ஆன்மீக மற்றும் வரலாற்று பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் நாட்டின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். X பற்றிய ஒரு நூல் பதிவில், ஸ்ரீ மோடி எழுதினார்: “நமது கலாச்சார பாரம்பரியத்திற்கு ஒரு மகிழ்ச்சியான நாள்!  பகவான் புத்தரின் புனித பிப்ரஹ்வா நினைவுச்சின்னங்கள் 127 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டிற்கு வந்திருப்பது ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும். இந்த புனித நினைவுச்சின்னங்கள் பகவான் புத்தருடனும் அவரது உன்னத போதனைகளுடனும் இந்தியாவின் நெருங்கிய தொடர்பை ...

ஏமன் நாட்டில் சாவுக்கும் ஆயுள் தண்டனைக் கும் இடையே திருசங்கு நிலையில் கொலைக்குற்றவாளி நிகிஷா பிரியா

2017-ஆம் ஆண்டில் இஸ்லாமிய சட்டம் நடைமுறையில் உள்ள நாட்டில் பணிக்குச் சென்ற  கேரளா பெண் நிமிஷா பிரியா அந்த நாட்டின் பிரஜையான மஹதி என்பவருக்கு மயக்க மருந்து கொடுத்து அவரது கடவுச் சீட்டை (பாஸ்போர்ட்டை) மீட்க நிமிஷா பிரியா முற்பட்டபோது அதிகமான மயக்க மருந்தால் மஹதி உயிரிழந்தார்.  அவரைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகத் தீா்ப்பளிக்கப்பட்டு, நிமிஷா பிரியாவுக்கு ஜூலை மாதம் 16 ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது. இந்த நிலையில் அந்தத் தண்டனையை தள்ளி வைத்தனர் கிராண்ட் முப்தி அலுவலகம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏமன் தலைநகர் சனாவில் நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரண தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஏமன் அரசிடமிருந்து எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. வெளிவிவகார அமைச்சகம் ஜூலை 17 அன்று வெளியிட்ட அறிக்கையில், நிமிஷா பிரியாவுக்கு ஏம...

வழக்குரைஞர் வாஞ்சிநாதன் மீது அவதூறு வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு சென்றது

நேற்று ஜூலை மாதம் 28 ஆம் தேதி நீதியரசர்கள் ஜி.ஆர்சுவாமிநாதன், ராஜசேகர் அமர்வில் விசாணைக்கு ஆஜரானார் வழக்குரைஞர் வாஞ்சிநாதன். அப்போது அவரளித்த பேட்டி காணொளிக் காட்சியைக் காட்டி, அதன் தலைப்பை படிக்குமாறு கூறினார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். அதை படிப்பதற்கு தடுமாறிய வக்கீல் வாஞ்சிநாதனைப் பார்த்து, "சத்தமா படிங்க..எனக்  கூறினார்  நீதியரசர் ஜிஆர் சுவாமிநாதன். இதையடுத்து வாஞ்சிநாதன், "நான் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அனுப்பிய புகார் குறித்து எழுத்துப் பூர்வமாக விளக்கமளித்து அதனை தாக்கல் செய்துள்ளேன். என் மீதான குற்றச்சாட்டு எந்த நிலையில் உள்ளது என்பதில் எனக்குத் தெளிவில்லை. நீங்கள் கேட்பது கேள்விக்கு தொடர்பானதாக இல்லை. அதனை எழுத்துப்பூர்வமாகக் கொடுக்கவில்லை. வீடியோவை பார்த்து என்னால் விளக்கமளிக்க முடியவில்லை. உங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அதை நீங்களே விசாரிப்பது என்பது எந்த வகையில் நியாயம்?" என்றார். இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீங்கள் அளித்த புகாருக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று தான் நீதிமன்றம் கூறுகிறது. அதுவும் ஒருவருக்கு நீங்கள் ஆஜராகி...

திருப்பூரில் அண்ணனையும் அண்ணன் மகனான வக்கீலையும் படுகொலை செய்த தம்பி மற்றும் கூலிப்படை காவல்துறையில் சரண்

 தவறுக்கு மேல் தவறு  அண்ணனையும் அண்ணன் மகனான வக்கீலையும் படுகொலை செய்த  கொடூரம் தாராபுரம்  படுகொலை  திருப்பூர் மாவட்டம் தாராபுரம்: வழக்கறிஞர் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வில் பள்ளித் தாளாளர் உள்ளிட்ட கூலிப்படையாகச் செயல்பட்ட 5 பேர் தாராபுரம் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்தனர். தாராபுரம் லிங்கசாமி. ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மனைவி சுபத்ரா தேவி மகன் முருகானந்தம் (வயது 35) சென்னையில் வழக்குரைஞராகப் பணியாற்றுகிறார். லிங்கசாமி 15 ஆண்டுகளுக்கு முன்பு காங்கேயம் அருகே கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில்  உள்ள சாட்சிகளின் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுதலையாகினர். இதனால் முருகானந்தம் தந்தை கொலைக்கு தனது சித்தப்பா தண்டபாணி தான் காரணம் என அவரை சட்டப்படியோ அல்லது வேறு வகையிலோ பழி வாங்க வேண்டும் என்று சபதம் எடுத்ததாகவும். அதற்காகவே முருகானந்தம் சட்டம் படித்தாராம். சித்தப்பா தண்டபாணி தாராபுரம் நகராட்சி மத்திய பஸ் நிலையம் எதிர்புறம் தேன்மலர் மெட்ரிக்குலேசன் பள்ளிய...

மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை சந்தித்த ராஜஸ்தான் முதல்வர்

இராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா இன்று டெல்லியில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஐ சந்தித்தார். “ராஜஸ்தானில் விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கு முழு ஆதரவு வழங்கப்படும்” - சிவராஜ் சிங் சவுகான் “கணக்கெடுப்பு சரிபார்ப்புக்குப் பிறகு பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கூடுதல் வீடுகள் விரைவில் அனுமதிக்கப்படும்” - ஸ்ரீ சவுகான் மையம் ராஜஸ்தானுக்கு MGNREGA இன் கீழ் ₹4,384 கோடியை விடுவிக்கிறது. மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ரீ சிவராஜ் சிங் சவுகான், இன்று புதுதில்லியில் உள்ள கிருஷி பவனில் ராஜஸ்தான் முதல்வர் ஸ்ரீ பஜன் லால் சர்மாவை சந்தித்தார். கிராமப்புற மற்றும் விவசாயத் துறைகளின் விரிவான வளர்ச்சி தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் அர்த்தமுள்ள கலந்துரையாடலை நடத்தினர். மத்திய வேளாண்மைத் துறை இணையமைச்சர் ஸ்ரீ பகீரத் சவுத்ரி, வேளாண் செயலாளர் ஸ்ரீ தேவேஷ் சதுர்வேதி, ஊரக மேம்பாட்டுச் செயலாளர் ஸ்ரீ சைலேஷ் சிங், ஐசிஏஆர் இயக்குநர் ஜெனரல் டாக்டர் எம்எல் ஜாட் மற்றும் மத்திய அமைச்சகங்கள் மற்றும் ராஜஸ்தான் அரசின் மூத்த அதிகாரிகளும்...

சூரிய ஒளி மின்கலங்களுக்கான ALMM உத்தரவில் MNRE திருத்தம் வெளியீடு

சூரிய ஒளி மின்கலங்களுக்கான ALMM உத்தரவில் MNRE திருத்தங்களை வெளியிடுகிறது பட்டியல் வெளியிடப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு ALMM-பட்டியலிடப்பட்ட சூரிய PV செல்களின் கட்டாயப் பயன்பாடு தொடங்கப்பட வேண்டும் ஜூன் மாதம் 1 ஆம் தேதி, 2026 முதல் சூரிய PV செல்களுக்கான ALMM ஆணை மாறாமல் உள்ளது புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE), 10.04.2021 முதல் அமலுக்கு வரும் வகையில் சோலார் PV தொகுதிகளுக்கான மாதிரிகள் மற்றும் உற்பத்தியாளர்களின் (ALMM) அங்கீகரிக்கப்பட்ட பட்டியலையும், 01.06.2026 முதல் அமலுக்கு வரும் வகையில் சோலார் PV மின்கலங்களுக்கான ALMM-ஐயும் முன்னதாக அறிவித்திருந்தது.  ALMM என்பது உற்பத்தியாளரின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கும், நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதற்கும், நாட்டின் பெரிய எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஒரு வழிமுறையாகும். இந்த வழிமுறை நாட்டில் உள்நாட்டு சூரிய சக்தி உற்பத்தித் துறையின் விரைவான ஊக்குவிப்பை உறுதி செய்துள்ளது, இது தற்போது 91 GW சூரிய PV தொகுதிகள் மற்றும் 27 GW சூரிய PV செல்களாக உள்ளது. மின்சாரச் சட்டம் 2003 இன் பிரிவு 63 இன் கீழ் அரசு நிறுவனங...

நோய்கண்ட நாய்களின் கருணைக் கொலைக்கு அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் நாய்களின் தொல்லை சமீப காலங்களில் அதிகரித்து வருவதாக பொதுமக்களிடையே மிகவும் அச்சத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. நாய் கடித்தல், வெறிநாய் கடித் தொற்று, சாலை விபத்துகள் மற்றும் பொது பாதுகாப்புக் கவலைகள் போன்ற சம்பவங்கள், குறிப்பாக குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களை பாதிக்கும் இந்த நாய்க்கடி சம்பவங்கள் அதிகரிக்கின்றன. 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை நாய் கடியால் 39,259 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளநிலையில் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் ஆகிய இரண்டு மாவட்டங்களில் மட்டும் ரேபிஸ் எனும் வெறிநாய் கடி தொடர்பான இரண்டு இறப்புகள் நடந்ததுள்ளதாக  சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன . 2022-ஆம் ஆண்டு 3 லட்சத்து 65 ஆயிரத்து 318- ஆக இருந்த தெரு நாய் கடி சம்பவம் தற்போது, 2023-ஆம் ஆண்டில் 4 லட்சத்து 40 ஆயிரத்து 921-ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் 1 லட்சத்து 24 ஆயிரம் தெரு நாய்கடி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் 2017 ஆம் ஆண்டில் 16  நபர்கள் உயிரிழந்தனர் 2014 ஆம் ஆண்டில் 47 பேர் உயிரிழந்துள்ளனர் இதில் நான்கு வயது உடைய ஒரு குழந்தை உயிர...