2024-25 நிதியாண்டில் சுங்கவரி வசூல் செலவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.2,062 கோடி சேமிப்பு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) பொது நிதியுதவி பெறும் சுங்கச்சாவடிகளில் சுங்கவரி வசூல் செலவை ரூ.2,062 கோடியாக வெகுவாகக் குறைத்துள்ளது. சுங்கவரி வசூல் செலவு 2023-24 நிதியாண்டில் ரூ.4,736 கோடியிலிருந்து 2024-25 நிதியாண்டில் ரூ.2,674 கோடியாகக் குறைந்துள்ளது. சதவீத அடிப்படையில், சுங்கவரி வசூல் செலவு 2023-24 நிதியாண்டில் 17.27 சதவீதத்திலிருந்து 2024-25 நிதியாண்டில் 9.27 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2023-24 நிதியாண்டில் சுங்க நிறுவனங்கள் வசூலித்த மொத்த சுங்கவரி ரூ.27,417 கோடி, இதில் சுமார் ரூ.22,681 கோடி என்எச்ஏஐக்கு அனுப்பப்பட்டது. 2024-25 நிதியாண்டில் சுங்க நிறுவனங்கள் மொத்தம் சுமார் ரூ.28,823 கோடியை வசூலித்தன. இதில் சுமார் ரூ.26,149 கோடி ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது. தற்போதைய ஒப்பந்தங்களை நெருக்கமாகக் கண்காணித்தல், 3 மாத நீட்டிப்பு விதியை நீக்குதல், சரியான நேரத்தில் ஏலம் நடத்துதல், ஒரு வருட கால ஒப்பந்தங்களை அதிகரித்தல், மூன்று மாத குறுகிய கால ஒப்பந்தங்களைக் குறைத்தல் போன்ற தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ...
RNI:TNTAM/2013/50347