தேசிய கடல்சார் ஆய்வுத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் – ரூ.84,084 கோடி நிதி ஒதுக்கீடு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நேற்று (31.07.2026) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள ‘சமுத்திர மந்தன்’ எனப்படும் தேசிய கடல்சார் ஆய்வுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முழுப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்திற்கு 2030-31 நிதியாண்டு வரையிலான காலத்திற்கு ரூ.84,084 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் பரந்த அளவிலான கடல்சார் ஆற்றல் திறனை முழுமையாக வெளிக்கொண்டு வரும் நோக்கில், 2025-ம் ஆண்டு சுதந்திரத் தினத்தன்று செங்கோட்டையிலிருந்து பிரதமர் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட நவீன காலச் சமுத்திர மந்தன் என்ற தொலைநோக்குப் பார்வையை இத்திட்டம் நனவாக்குகிறது. இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், உள்நாட்டில் எண்ணெய் வளங்கள் ஆய்வு, உற்பத்தியை விரைவுபடுத்துதல், தொழில்நுட்பத் தலைமைத்துவத்தை ஊக்குவித்தல், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி முன்னேறுதல் ஆகியவ...
RNI:TNTAM/2013/50347