பல சொத்துக்களைக் குவித்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தவறான பண முதலீட்டு நபர்கள் இடங்களில் ED சோதனை
சென்னை, இராமநாதபுரம், கோழிக்கோடு, கண்ணூர், மல்லாபுரம் மற்றும் திருச்சூர். ஆகிய ஊர்களில் உள்ள 18 இடங்களில் அமலாக்கத்துறை (ED) சோதனை நடந்தது. மேலும் மொத்தம் 5 வழக்குகளும் அதிலுள்ளன. தென் பிராந்தியத்தின் அனைத்து மண்டலங்களிலும் 30 வளாகங்களில் பல்வேறு போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் ED ஒரே நேரத்தில் நடத்திய தேடுதல் சோதனை நடவடிக்கைகளில் நாஷா முக்த் பாரத் கட்டளையின் கீழ் இந்தத் தேடல்கள் நடத்தப்பட்டன. தேடுதல் வளாகம் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் விரிந்து பரவியுள்ளது. PMLA ன் கீழ் விசாரிக்கப்படும் 8 வெவ்வேறு வழக்குகளிலும் தேடுதல்கள் நடத்தப்படுகின்றன. மேலும் அதிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில் இலங்கை மற்றும் இந்திய பிரஜைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மெத்தப்பேட்டமைன் கடத்தல் மற்றும் ஹவாலா பரிவர்த்தனைகள் அடங்கும். தமிழ்நாட்டில் இராமநாதபுரத்தில் தலா 2 இடங்களிலும், சென்னையில் 6, நாகப்பட்டினம் மற்றும் வேளாங்கண்ணியில் 6 இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டது. 950 கிராம் முதல் 54.6 கிலோ எடையுள்ள மெத்தப்பெட்டமை...