அமைச்சர் CTR நிர்மல் குமார் குறித்து எம் பி ஆ. ராஜா செய்த அவதூறுக்கு எதிர்ப்பு மற்றும் மிசா குறித்த உணமை கூறும் அறிக்கை நிலையும்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மிசா சட்டத்தின் கீழ் திமுக தலைவர் ஸ்டாலின் கைது செய்யபடவில்லை என்பது குறித்து அமைச்சர் CTR நிர்மல்குமார் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, செப்டம்பர் 12-ஆம் தேதி பல்வேறு வருவாய் மாவட்டங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் மாநில அமைச்சர் ம.சுப்பிரமணியன், நாடாளுமன்ற மக்ஙளவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது ஆ.ராசா பேசிய கருத்துகள் அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகள் மத்தியில் கடுமையான சர்ச்சையை உறுவாக்கியதுடன், மாற்றுக் கட்சியினர் மற்றும் அவர்கள் தனிப்பட்ட குடும்பத்தினரைத் தரக்குறைவாக சாடியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மற்றும் திமுக நாடாளுமன்ற கட்சித்தலைவர் கனிமொழி கருணாநிதி உள்ளிட்டவர்கள் மற்றும் தோழமைக்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர், அதற்கு ஆ.ராசா சர்ச்சை பேச்சுக்கு விளக்கமளித்து அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “தி...