திருக்கோஷ்டியூர் 108 திவ்ய தேச மண்ணின் மைந்தன் - ஸ்ரீ ராமஜென்ம பூமி நாயகன் பராசரன் 100 - ஆசி வழங்கிய ஆச்சாரியார்கள். திருக்கோஷ்டியூர் 108 திவ்ய தேச பூமியில் வேர்கொண்டவர் - ஸ்ரீ ராமனுக்காக செருப்பின்றி நின்று வாதாடிய பராசரன் 100 - இல்லம் தேடி வந்து ஆசி வழங்கிய ஆச்சாரியார்கள்! *மூத்த வழக்கறிஞர் திரு K.பராசரன் அவர்களின் சொந்த ஊர் - சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் - 108 திவ்ய தேசங்களில் ஒன்று.* அதே திருக்கோஷ்டியூர் தான் ஸ்ரீராமானுஜரின் குரு திருக்கோஷ்டியூர் நம்பிகள் அவதரித்த பூமி. "ஓம் நமோ நாராயணாய" என்ற அஷ்டாட்சர மந்திரத்தை, "நரகம் போனாலும் பரவாயில்லை, உலகம் உய்ய வேண்டும்" என்று கோபுரத்தில் ஏறி ராமானுஜர் உலகுக்கு உபதேசித்த புண்ணிய பூமி. அங்கு தேவர்கள் கோஷ்டியாக - கூட்டமாக கூடி இரணியனை வதம் செய்ய திட்டமிட்டதால் "திருக்கோஷ்டியூர்" என்ற பெயர். அந்த திருக்கோஷ்டியூர் மண்ணில் வேர்கொண்ட குடும்பத்தில் 09-10-1927-ல் ஸ்ரீரங்கத்தில் பிறந்தவர் தான் பராசரன். தந்தை வேத வித்து R.கேசவ ஐயங்காரும் வழக்கறிஞரே. அதனால் தான் அவரிடம் வேதமும், சட்டமும் ஒன...
RNI:TNTAM/2013/50347