முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஊழல் செய்த முன்னால் அமைச்சர் புலவர் இந்திரகுமாரிக்கும் அவரது கணவர் பாபுவுக்கு ஐந்தாண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

ஊழல் செய்த முன்னால் அமைச்சர் புலவர் இந்திரகுமாரிக்கும் அவரது கணவர் பாபுவுக்கு ஐந்தாண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு. இப்போது திமுகவில் இருக்கும் புலவர் இந்திரகுமாரி 1991  ஆம் ஆண்டு முதல் 1996 வரை முதல்வராக இருந்த ஜெ.ஜெயலலிதாவின்  அதிமுக ஆட்சிக் காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்து ஊழல் முறைகேடு செய்தவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம், கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை  வழக்குப் பதிவு செய்திருந்த புகாரில்   மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளி நடத்துவதாகக் கூறி இந்திரகுமாரியின் கணவர் பாபு அரசிடமிருந்து ரூபாய் 15.45 லட்சம் முறைகேடு செய்திருந்த குற்றச்சாட்டு கூறப்பட்டிருந்தது. தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. முழு விசாரணை நடத்தி வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது., இவ்வழக்கு விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, அனைத்துத் தரப்பு...

சிறப்புப் பண்புகளுடன் கூடிய 35 பயிர் வகைகளை இன்று பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

பிரதமர் அலுவலகம்  சிறப்புப் பண்புகளுடன் கூடிய 35 பயிர் வகைகளை இன்று பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் ராய்பூரில் புதிதாக கட்டப்பட்ட தேசிய உயிரியல் அழுத்த சகிப்புத்தன்மை நிறுவன வளாகத்தை பிரதமர் தேசத்திற்கு அர்ப்பணிக்கிறார் வேளாண் பல்கலைக்கழகங்களுக்கு பசுமை வளாக விருதையும் பிரதமர் வழங்குகிறார் பருவநிலை எதிர்வினை தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதற்கான மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில், செப்டம்பர் 28 அன்று காலை 11 மணிக்கு அனைத்து ஐசிஏஆர் நிறுவனங்கள், மாநில மற்றும் மத்திய வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் கிரிஷி விக்யான் கேந்திரங்களில் நடைபெறவுள்ள அகில இந்திய நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு பண்புகளுடன் கூடிய 35 பயிர் வகைகளை காணொலி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் ​​தேசிய உயிரியல் அழுத்த சகிப்புத்தன்மை நிறுவனம், ராய்ப்பூருக்காக புதிதாக கட்டப்பட்ட வளாகத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இந்நிகழ்ச்சியில், வேளாண் பல்கலைக்கழகங்களுக்கு பசுமை வளாக விருதை பிரதமர் வழங்குவார், மேலும் புதுமையான முறைகளைப் பயன்படுத்தும் மற்றும் விவசாயிகளுடனும் நிகழ்ச்சியில் கல...

ஹம்போட்டிங் லாவில் தூர்தர்ஷன்/அகில இந்திய வானொலி டிரான்ஸ்மிட்டர்களை மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தொடங்கி வைத்தார்

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் லடாக்கில் உள்ள ஹம்போட்டிங் லாவில் தூர்தர்ஷன்/அகில இந்திய வானொலி டிரான்ஸ்மிட்டர்களை மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தொடங்கி வைத்தார் லடாக்கில் கார்கில் அருகே உள்ள ஹம்போட்டிங் லாவில் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியின் உயர் சக்தி டிரான்ஸ்மிட்டர்களை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் நாட்டுக்கு அர்ப்பணித்தார் இந்த 10 கிலோ வாட் டிரான்ஸ்மிட்டர்கள் நாட்டின் மிக உயரமான தொலைக்காட்சி மற்றும் ரேடியோ டிரான்ஸ்மிட்டர்கள் ஆகும். சராசரி கடல் மட்டத்திலிருந்து 4054 மீட்டர் (சுமார் 13,300 அடி) உயரத்தில் இவை அமைந்துள்ளன. லே-வில் உள்ள டிரான்ஸ்மிட்டர்கள் 3501 மீட்டர் (சுமார் 11,450 அடி) உயரத்தில் உள்ளன. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மோசமான வானிலை மற்றும் புவியியல் நிலப்பரப்பைக் கருத்தில் கொண்டு ஹம்போட்டிங் லா தளம் மிகவும் கடினமான இடங்களில் ஒன்றாகும் என்று குறிப்பிட்டார். சவாலான வானிலையில் திட்டத்தை நிறைவு செய்ததற்கு பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழுவுக்கு திரு அனுராக் தாக்கூர் பாராட்டு தெரிவித்தார். டி.டி.காஷ்மீருக்கு லடாக்...

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு முதல் ஏழு புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு முதல் ஏழு புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி. இதனால் 850 மாணவர்கள் பயன்பெறுவார்கள். ஏழு மருத்துவக் கல்லூ ரிகள்: நீலகிரி (150 மாணவர்கள்), விருதுநகர் (150 மாணவர்கள்), கள்ளக்குறிச்சி (150 மாணவர்கள் ), நாமக்கல் (100 மாணவர்கள் ), திருப்பூர் (100 மாணவர்கள்), திருவள்ளூர் (100 மாணவர்கள்), இராமநாதபுரம் (100 மாணவர்கள்) இத் தகவலை தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் அறிவித்தார். 11 கல்லூரிகளுக்கு அனுமதி கேட்டிருக்கிறது தமிழக அரசு. ஆகஸ்ட் மாதம் தேசிய மருத்துவ அமைப்பு (National Medical Commission NMC) தமிழகம் வந்து ஆய்வு நடத்தி அதையடுத்து செப்டம்பரில் 7 கல்லூரிகளுக்கு அனுமதி. இதன் காரணமாக, தமிழக மருத்துவ கல்லூரிகளின் இருக்கைகள் 4,300 ஆக உயரும் என்கிறது டைம்ஸ் ஆஃப் இண்டியா. அனால்  4,600 என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ்.

சட்டக்கல்வியை முறையாகப் பயிலாமல் வழக்கறிஞர்களாகினர் என. சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தெரிவித்தார்

சட்டக்கல்வியை முறையாகப் பயிலாமல் வழக்கறிஞர்களாகினர் வழக்கறிஞர் தொழில் எளிதானதல்ல; வெற்றி பெறக் கடுமையான உழைப்பும், நேர்மையும் அவசியமென சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தெரிவித்தார். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர்கள் நலநிதி அறக்கட்டளைத் துவக்க விழாவில் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி கலந்து கொண்டு அறக்கட்டளைக்கு முதல் நன்கொடையாக மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் வழங்கிய ரூபாய்.10.50 லட்சத்துக்கான காசோலை வழங்கினார். இதை அறங்காவலர்களான ஆர்.காந்தி, ஆறுமுகம் ஆகியோரிடம் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி வழங்கினார்.விழாவில் பேசிய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி  பேசுகையில் வழக்கறிஞர் தொழில் எளிதானதல்ல. எளிதாக தங்கப் புதையல் கிடைக்கும் தொழில் வழக்கறிஞர் தொழிலல்ல. இதில் வெற்றி பெறக் கடுமையான உழைப்பும், நேர்மையும் அவசியம். இந்தியாவில் சுமார் 2,800 சட்டக் கல்லூரிகள் உள்ள நிலையில்.சமீபத்தில் சட்டக் கல்வியை முறையாகப் பயிலாமல் வழக்கறிஞர்களாக வருகின்றனர். சட்டக் கல்வியின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டியது தற்காலத்தின் தேவையாகும். கல்வி ஒரு மனிதனை மேம்படுத்...

மும்பை தனியார் பள்ளியின் கட்டணம் செலுத்த மாணவிக்கு உயர்நீதிமன்றம் சலுகை

கொவிட் 19 கொரோனா  பரவல் காலத்தில் தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்தாததால் பள்ளியின், மாணவியை ஆன்லைன் வகுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட நிலையில்  அவரது செல்லுலார் தொலைபேசி மூலம் பாடம் நடத்தும்  இணைப்பும்  தடை செய்த காரணத்தால். தனது மாற்றுச் சான்றிதழ் (TC ) திருப்பித் தருமாறு கேட்டும் தராததால், மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மாணவி. தரப்பில் பள்ளி மாணவியின் மாற்றுச் சான்றிதழான TC மை உடனே தர வேண்டும் எனவும் மேலும் பள்ளி நிர்வாகம் கட்டணத்தில் நாற்பது சதவீதம் தள்ளுபடி தர வேண்டும் என்றும் மும்பையில்  உயர் நீதிமன்றம் தீர்ப்பு.வழங்கியுள்ளது.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி நவ்ஜோத் சிங் சித்து இராஜினாமா

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி  நவ்ஜோத் சிங் சித்து இராஜினாமா   பஞ்சாப் மாநில ஆளும் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் அரசியல் போட்டி காரணமாக  பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கும், கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கும்  சில ஆண்டுகளாகவே பிரச்னை இருந்தது.  பத்து நாட்களுக்கு முன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கேப்டன் அமரீந்தர் சிங். பின்னணியில் நவ்ஜோத் சிங் ஏற்படுத்திய அரசியல் அழுத்தம் காரணமாகக் கூறப்பட்டது., எம்.எல்.ஏக்களின் கூட்டத்த்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை, சரஞ்ஜித் சிங் சன்னியை முதல்வராகத் தேர்ந்தெடுத்தது. முதல்வர் பதவியிலிருந்து விலகிய கேப்டன் அமரிந்தர் சிங், நவ்ஜோத் சிங் சித்து குறித்தும், காங்கிரஸ் தலைமை மீதுமான தனது அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில் காங்கிரஸ் கட்சியில் தான் அவமானத்தை சந்தித்து வந்ததாகவும் அவர் தெரிவித்த நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்துள்ளது பரபரப்புக் கூடியுள்ளது. ஜூலை மாதம் 18 ஆம் தேதி தான் சித்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக்கப்பட்ட நிலையில். பதவியை ராஜினாமா செய்து...