அமலாக்கத்துறையின் தலைமை இயக்குநர் இராகுல் நவீன் இன்று சென்னை வருகை தந்தார்.டில்லியிலிருந்து 3 நாள் பயணமாக வந்த இராகுல் நவீன், நிலுவையிலுள்ள நகராத வழக்குகள் குறித்து ஆய்வு செய்கிறார். மேலும், தற்போது நீதிமன்றங்களில் தமிழ்நாடு தொடர்பான தேக்கமான வழக்குகளின் நிலை குறித்தும் அமலாக்கத்துறை உயர் அலுவலர்களுடனும் மத்திய அரசு வழக்கறிஞர்களுடனும் ஆலோசனை நடத்த உள்ளார். சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அமலாக்கத்துறை இயக்குநரின் தமிழ்நாடு வருகை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.மேலும், தற்போது நீதிமன்றங்களில் உள்ள தமிழ்நாடு தொடர்பான ஊழல் பண மோசடி உள்ளிட்ட வழக்குகளின் நிலை குறித்தும் அமலாக்கத்துறை அலுவலர்களுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், நிலுவையில் இருக்கும் வழக்குகளின் விசாரணையை அமலாக்கத்துறை வேகப்படுத்தியிருப்பது ஊழல் வாதிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு ஊழல் செய்து லஞ்சம் பெற்ற வழக்கு விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள்...
RNI:TNTAM/2013/50347