பதவி உயர்வு மறுப்பு, சமூகநீதி இல்லை, படி வழங்குவதில் பாகுபாடு: காவல்துறையினரின் தீர்க்கப்படாத குறைகளை களைய வேண்டும்! பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் அறிக்கையில். :- காவல்துறையினரின் பதவி உயர்வு தொடர்பாக நியாயத்தின் அடிப்படையில் கொள்கை முடிவு எடுப்பதற்கு பதிலாக, அனைத்து சிக்கல்களையும் நீதிமன்ற வழக்குகள் மூலம் எதிர்கொள்வதில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருவதால், பல்லாயிரக்கணக்கான காவல்துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்காத நிலை உருவாகி உள்ளது. காவல்துறையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியும், நிவாரணமும் வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த த.வெ.க. அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது நியாயமல்ல. கொள்கை முடிவுகளை எடுப்பதில் கடந்த ஆட்சியாளர்களும், இன்றைய ஆட்சியாளர்களும் இழைத்த தவறுகளாலும், தவறுகளை சரி செய்வதில் ஆர்வம் காட்டாததாலும் ஏற்பட்ட அநீதியின் வரலாறு 1994&ஆம் ஆண்டில் தொடங்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளர்களுக்கு நீதி வழங்கப்படாததால், அதன்பின் தேர்ந்தெடுக்கப்பட்...
RNI:TNTAM/2013/50347