இணையதள மோசடிகளுக்கு வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டதாக தமிழ்நாடு முழுவதும் 205 பேர் கைது பொதுமக்களின் வங்கிக் கணக்குகளை தவறாகப் பயன்படுத்தி ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 205 சைபர் குற்றவாளி களை சென்னை காவல் துறை கைது செய்துள்ளது. தேசிய இணையவழி குற்றப் புகார் பதிவேற்ற https://cybercrime.gov.in தளத்தில் பதிவான புகார்களை சென்னை காவல் துறையின் சைபர் குற்றப் பிரிவு தீவிரமாக ஆய்வு செய்ததில், பணத்தாசை காட்டி பொது மக்களின் வங்கிக் கணக்குகளை பெறும் சைபர் குற்றவாளிகள், அவற்றை சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைக்கு தொடர்ந்து பயன்படுத்தி வருவதும் தெரியவந்ததையடுத்து, சென்னை காவல்துறை ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், சைபர் க்ரைம் காவல்துறையினர் கடந்த 6. மற்றும் 7-ஆம் தேதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், பல்வேறு வங்கிகளில் செயல்பட்டு வந்த 310 'மியூல்' வங்கிக் கணக்குகள் (மோசடிக்கு பயன்படுத்தப்படும் வாடகைக் கணக்குகள்) கண்டறியப்பட்டன. அதன் மூலம் நடந்த பணப் பரிவர்த்தனைகளை காவல்துறையினர் ஆய்வு செய்ததில், இணைய மோசடிகளுக்காகவே இந்தக் கணக்குகளைப் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. சென்னை, கோயம்பத்த...
RNI:TNTAM/2013/50347