முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

COVID-19 பொது சுகாதார நடவடிக்கை குறித்த தினசரி அறிக்கை

தமிழ்நாடு மாநிலக் கட்டுப்பாட்டு அறை, பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம் சுகாதாரம்  மற்றும் குடும்ப நலத்துறை, தமிழக அரசு மீடியா புல்லட்டின் 30.03.2020 COVID-19 க்கு எடுக்கப்பட்ட பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்த தினசரி அறிக்கை 203 நாடுகளை பாதிக்கும் COVID-19 எனும் கொரானா வைரஸ் பரவல் தொற்றுநோயாக உலக சுகாதார நிறுவனம்  அறிவித்துள்ளது. இந்த சூழலில், தமிழக அரசு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது இந்த நோய், தேசிய வழிகாட்டுதல்களின்படி. தமிழ்நாட்டில், இன்று நிலவரம்

மாநகராட்சி மறுப்பு ரெட்அலர்ட் என்பது இல்லை அது வதந்தி

புயல்,பூகம்பம் ,பெருமழை, சுனாமி,கொரோனாவென எது வந்தாலும் "ரெட் அலர்ட்" என அவசரப்பட்டு செய்தி பலர் கொடுக்கிறார்கள் காரணம் விசாரிக்காமல்  அது மிகப்பெரிய தவறு. ரெட் அலர்ட் என்பது..சம்பந்தப்பட்ட  துறையின் மாநில தலைமையிலிருந்து எழுத்துப் பூர்வமாகவே வரும்..வாய் மொழியாக வராது அதைக் கொடுக்கும் அதிகாரம் படைத்த் அதிகாரிகள்:- தலைமைச் செயலாளர். காவல்துறை இயக்குனர். IMD -உயர் அலுவலர் (முதல்வரோ.. அமைச்சர்களோ அறிவிக்க் முடியாது.காரணம் இது நிர்வாகம் சம்பந்தப்பட்ட விசயம்) அதேபோல் தமிழகத்திற்கு துணை ராணுவம் வருகை என செய்தி கொடுக்கிறீர்கள் இதுவும் தவறு ராணுவம் இரு நாட்டு பிரச்சினைக்கு மட்டுமே வெளியே வரும்.அல்லது ஒரு மாநிலத்தில் எதிரி நாட்டு ராணுவமோ. அல்லது அவர்களின் உதவி பெறும் தீவிரவாதிகளோ புகுந்து நாட்டுக்கு ஆபத்து என்றால் மட்டுமே ராணுவம் வரும்.உதாரணம்: காஷ்மீர்  தேர்தல் நேரத்தில் மாநிலங்களுக்கு வருவது ராணுவம் அல்ல "மத்திய ஆயுதப் படை"யாகும் Central reserve police force சுறுக்கமாக CRPF இப்படை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது இதற்கு அமைச்சர் அமீத்ஷா ராணுவம் பாதுகாப்புத் துறைய...

சூரியன் அஸ்தமிக்காத நாட்டில் கொரானாவால் சோதனை

இளவரசர் சார்லஸ் ஒருபக்கம், ஒட்டுமொத்த அரச குடும்பமே மறுபக்கம் இது கொரானா செய்த வேலை. எல்லா நாடுகளில் அதிகாரம் செய்த அந்த நாட்டையும் நாட்டின் அரசர்கள் வரை கொரானா ஆதிக்கம் செய்கிறது.    உலகின் ஏழாவது பணக்கார நாடு என்று பெருமைகொநண்டதும். ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக முக்கியமான நாடும், ஒரு காலத்தில் “சூரியன் அஸ்தமிக்காத நாடு” என்று இந்தியா உள்ளிட்ட பல காலனி ஆதிக்க நாடுகளைத் தனதாதிக்கத்தின் கீழ் சுரண்டிக் கொழுத்த  நாடுமான இங்கிலாந்து இன்று கொராணா மாத்திரமல்ல பல பொருளாதார நெருக்கடிகளில் சிக்கியிருக்கிறது. அது கடந்து வந்த காலங்களில் சிறப்பான காலம் மன்னர் முதலாம் சார்லஸ் காலம் தான். சார்லஸ் ஸ்காட்லாந்தின் ஆறாம் ஜேம்ஸ் மன்னரின் இரண்டாவது மகன்.  இங்கிலாந்தின் ஆட்சியை 1603 இல் பெற்றதை அடுத்து சார்லஸ் இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்தார்.  1612 ல் ஜேம்சு மன்னரின் மூத்த மகன் இளவரசர் ஹென்றி பிரெட்ரிக் இறந்துவிட  சார்ல்ஸ் இங்கிலாந்து, ஐயர்லாந்து, ஸ்காட்லாந்து இராஜ்ய முடி இளவரசராக அறிவிக்கப்பட்டு. 1623 இல் சார்ல்சிற்கு ஸ்பானிய ஆப்சுபூர் இளவரசியுடன் திருமணம்  தோல்வியில் முடிந...

முன்னாள் துணைவேந்தர் சிட்டிபாபு 100 வயதில். இயற்கை எய்தினார்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் சிட்டிபாபு 100 வயதில். இயற்கை எய்தினார் .நூறாண்டு வாழ்ந்து மறைந்த முன்னால் துணைவேந்தர்  சை. வே. சிட்டிபாபு வின் ஜனனம்-1920  சைதாப்பேட்டை வேணுகோபால் சிட்டிபாபு.இவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் அழகுறப் பேசக்கூடியவர். பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநராக இருந்தவர். இவரது தந்தை  சை. வேணுகோபால். தாயார் ராம்பாய். ஆகும்  எம்.ஏ. (வரலாறு) பயின்று  இடைநிலைக் கல்வி இயக்குநராக இருந்தபோது கல்விச் சீரமைப்பு, தேர்வு சீர்திருத்தத்தின் பகுதியாக அகமதிப்பீடு திட்டம் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். 1977-1978 இல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தபோது திறந்த நிலைப் பல்கலை முறையை அறிமுகப்படுத்தினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் சென்னைப் பல்கலைக்கழகமும் இதைப் பின்பற்றின. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இவர் துணைவேந்தராக இருந்தபோது பட்ட மேற்படிப்பிலும் ஆராய்ச்சிப் படிப்பிலும் சிறப்பாகச் செயல்பட வேண்டுமானால், பல்கலைக்கழகம் உண்மையில் பல்கலைக்கழகமாகச் செயல்பட வேண்டுமானால் 3 ஆண்டு பட்டப்படிப்பு வகுப்புக...

தி மு க பொறுப்பிலிருந்து கே.பி.ராமலிங்கத்தை நீக்கம் செய்து அறிவிப்பு

திமுக விவசாய அணி மாநிலச் செயலாளர் பொறுப்பிலிருந்து கே.பி.ராமலிங்கம் நீக்கப்பட்டுள் ளார்.கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வீடியோ கான்பரன்ஸ் மூலம் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட கே.பி.ராமலிங்கம், அனைத்துக்கட்சி கூட்டம் தேவையில்லாதது என்றும், 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தக் கூடாது என்றும் வ லியுறுத்தினார். அவரது அறிக்கை கட்சியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சி பொறுப்பில் இருந்து கே.பி.ராமலிங்கத்தை நீக்கி மு.க.ஸ்டாலின் உத்தரவிட் டுள்ளார்.

கொரானா தடுப்பு ஆலோசனைக்குப் பின் முதலமைச்சர் செய்தியாளர் சந்திப்பு

கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை க்குப் பின் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு: தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதென முதலமைச்சர் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 67ஆக உயர்வு - 5 பேர் குணம டைந்துள்ளனர். கொரோனா அறிகுறியுடன் 1,925 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள் ளனரென முதலமைச்சர் தெரிவித்தார் .கொரோனாவுக்கு மருந்து தனிமைதான்எனவும் முதல்வர் தகவல். கொரானா மிகப்பெரிய தொற்று நோய் - வல்லரசு நாடுகளிலேயே மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என முதல்வர் தகவல்.சிகிச்சைக் காக தமிழகத்தில் 3,018 வெண்டிலேட்டர் தயார் நிலையில் உள்ளன கடுமையான சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது மக்களின் நன்மைக்கு தான் சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவது மக்களை துன்புறுத்துவதற்காக அல்ல, இது போன்ற ஒரு சவாலான நிலையை தமிழக அரசு எதிர்கொண்டது இல்லை. 43,537 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர், ஒன்றரை கோடி முகக்கவசங்கள் வாங்க ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. கொரோனா அறிகுறி இருக்கும் நபர்களை மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்த முடியும். சென்னையில் மட்டுமே 20 ...

ஊரடங்கு உத்தரவு குறித்து மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜிவ் கவுபா இஆப தகவல்

ஏப்ரல்14 ஆம் தேதிக்குப் பின் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை: மத்திய அரசு புதுடில்லி: ஏப்ரல்14ம் தேதிக்கு பின் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவ துவங்கியதை தொடர்ந்து, கடந்த 24ம் தேதி இரவு டிவியில் பேசிய பிரதமர் மோடி, 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவித்தார். இந்த உத்தரவு வரும் ஏப்ரல் 14 வரை அமலில் இருக்கும். ஆனால், இந்த ஊரடங்கு உத்தரவு அதற்கு பிறகும் நீட்டிக்கப்படும் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவ துவங்கியது. ஆனால், இதனை மறுத்துள்ள மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா கூறியதாவது: ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் ஆச்சர்யத்தை அளிக்கிறது. ஊரடங்கை நீட்டிக்கும் எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என தெரிவித்துள்ளார்.